தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ind vs ban test: கே.எல்.ராகுலிடம் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம்" - கேப்டன் ரோகித் சர்மா சென்னையில் பேட்டி! - IND VS BAN 1st Test series 2024 - IND VS BAN 1ST TEST SERIES 2024

கே.எல்.ராகுல் எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும். அதுவும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல்
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 5:51 PM IST

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் தொடர் வருகிற 19ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளுமே முக்கியம் தான். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் திறந்த நிலையில் உள்ளது. ஏனென்றால் அங்கு யார் வேண்டுமானாலும் இடம் பிடிக்கலாம்.

இதனால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது முக்கியமான ஒன்று. இதனால் அடுத்து இரண்டு மாதங்களில் எங்கு விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை. அதில் வெற்றி பெறுகிறோமா என்பது தான் முக்கியம்.

தற்போது வங்கதேசத்துக்கு எதிராக விளையாடக்கூடிய இந்த டெஸ்ட் தொடரையும் வெல்ல விரும்புகிறோம். அதன் அடிப்படையில், இந்த டெஸ்ட் தொடரை நாங்கள் அணுக இருக்கோம். ஒரு மாதம் ஓய்வுக்கு பிறகு இப்போது தான் டெஸ்ட் போட்டியை விளையாட தொடங்குகிறோம். எனவே, இந்த இடத்தில் இருந்து உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு.

டெஸ்ட் போட்டி தொடங்கிய பிறகு தான் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறிய முடியும். எனவே, அங்கிருந்து நாம் முன்னேறி செல்ல வேண்டும். எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏற்றம், இறக்கம் இருக்கும். இதை எல்லோரும் அறிந்தது தான்.

கே.எல்.ராகுல் நன்றாக விளையாட கூடிய வீரர். அதனால் கே.எல்.ராகுலுக்கு எங்கள் தரப்பில் இருந்து கூறுவது ஒரே ஒரு செய்தி மட்டும் தான். எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும். அதுவும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.

பின்னர் வங்கதேச தலைமை பயிற்சியாளர் சாடிக ஹத்துருசிங்க கூறுகையில், "சென்னை ஆடுகளம் நன்றாக இருக்கிறது. வீரர்கள் போராடக்கூடிய அளவிற்கு இந்த ஆடுகளம் இருக்கும் என்று கருதுகிறேன். ஆனால் மற்ற கண்டங்களில் ஆடுகளத்தின் தன்மை மாறி விடுகிறது. எப்போது ஆடுகளம் மாறும் என்பது தெரியவில்லை.

பாகிஸ்தான் தொடரில் கிடைத்த வெற்றி இந்திய டெஸ்ட் தொடருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. அந்த தொடரில் கிடைத்த முடிவை மட்டும் வைத்து இந்த நம்பிக்கை கிடைக்கவில்லை. நாங்கள் அந்த தொடரில் விளையாடிய விதம், ஆட்டத்தின் முக்கியமான தருணங்களை கையாண்ட விதம், இரு ஆட்டங்களிலும் நாங்கள் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்த விதம் ஆகியவையே இந்திய தொடர்கான நம்பிக்கை கொடுத்துள்ளது.

அணியின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துள்ளோம். அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சிறந்த சுழல் பந்துவீச்சு தாக்குதலும் உள்ளது. அணியில் இடம்பிடித்து உள்ள இரண்டு சுழற் பந்து வீச்சாளர்களுமே சிறந்த பேட்ஸ்மேன்கள்.

மேலும், இரண்டு விக்கெட் கீப்பர்களுமே பிரதான பேட்ஸ்மேன்களாக உள்ளனர். அந்த வகையில் இம்முறை எங்களது அணி சிறப்பாக உள்ளது. இதுவே இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எங்களால் சிறப்பாக விளையாடி முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது.

அணியை பலப்படுத்துவது என்பது நீண்ட நாள் செயல்முறை. இது ஒரே நாளிலோ அல்லது ஒரே இரவில் நடக்காது. எனக்கு முந்தைய பயிற்சியாளர்கள் அணியில் நிறைய வேலைகளை செய்துள்ளனர். மேலும், உள்நாட்டு விளையாட்டு போட்டிகளில் இருந்து சிறந்த வீரர்களை கண்டறிகிறோம். இதற்காக சிறப்பு திட்டங்கள் உள்ளன.

ஷாகிப் அல்ஹசன் வங்கதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் பங்களித்து வருகிறார். அணியில் இடம் பெறும்போது எல்லாம் அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து மெஹதி ஹசனும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறார்.

கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் அவருடைய ஆட்டத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் தனது பேட்டிங் திறமையை மேம்படுத்தி உள்ளார். எனினும் எப்போதும் அவருக்கு பந்து வீச்சு அவருடைய முக்கிய பலம். நல்ல வேலையாக இந்த தொடரில் விளையாடக்கூடிய எந்த வீரர்களுக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை" என்று ஹத்துருசிங்க தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details