சென்னை: சர்வதேச கோப்பு கூட்டமைப்பு சார்பில் முதல் முறையாக கோகோ உலகக் கோப்பை போட்டி ஜனவரி 13ஆம் தேதி முதல் நேற்று (ஜன.24) வரை டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், இலங்கை, பூட்டான் உட்பட 24 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின.
இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவுவில் இந்திய அணியும், நேபாள அணியும் மோதின. அதேபோல் பெண்கள் பிரிவில் இறுதி போட்டியில் இந்திய அணியும், நேபால் அணியும் மோதின. இதில் ஆண்கள் பிரிவில் நேப்பாளத்தை வீழ்த்து இந்திய ஆண்கள் அணியும். பெண்கள் பிரிவில் நேபாளத்தை வீழ்த்தி இந்திய பெண்கள் அணியும் வெற்றி பெற்று கோகோ உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து, கோகோ உலக கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணி மற்றும் பெண்கள் அணியை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்திய ஆண்கள் அணியில் தமிழ்நாட்டின் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் சுப்பிரமணி (21) இடம் பெற்று இருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்த கோகோ விளையாட்டு வீரர் சுப்பிரமணிக்கு தமிழ்நாடு கோகோ கூட்டமைப்பு சார்பிலும் தியாகி ராமசாமி நினைவு ஸ்போட்ஸ் கிளப் சார்பிலும் மாலை அணிவிக்கப்பட்டு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுப்பிரமணி, “முதல்முறையாக டெல்லியில் நடத்தப்பட்ட கோகோ உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளேன்.
இதையும் படிங்க: மீண்டும் சென்னையில் விளையாடுவது மகிழ்ச்சி... வருண் சக்ரவர்த்தி பேட்டி!
24 நாடுகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பூட்டான், பெரு உள்ளிட்ட நாடுகளுடன் ஏழு போட்டிகள் விளையாடி வெற்றி பெற்றோம். சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இறுதிப் போட்டியில் நேபாளத்துடன் ஆடியது மிகவும் கடினமாக இருந்தது. உலகக்கோப்பை வென்ற இந்திய ஆண்கள் அணியில் ஒருவர் எனபதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதிலும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தேசிய அளவில் சாதனை படைக்கும் கோகோ விளையாட்டு வீரர்களையும், காவல்துறை வேளையில் சேர்க்க வேண்டும்.
அதே போல் பயிற்சி எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் இன்டோர் மைதானம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். இதன் மூலம் அதிக வீரர்கள் கோகோ விளையாட்டின் மூலம் வெளியே தெரிவார்கள். கடின முயற்சியுடன் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தால் என்னை போல் கோகோ இந்தியா அணியில் விளையாட வாய்ப்புகள் கிடைக்கும். எனது பெற்றோருக்கும், நண்பர்களுக்கு, பயிற்சியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் முதல்வர் கோப்பையில் கோ கோ விளையாட்டையும் சேர்த்து உள்ளனர். அதில் ஓபன் கேட்டகரியையும் சேர்க்க வேண்டும்” என்றார்.