ETV Bharat / state

தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது.. முதல் பரிசு எதற்கு தெரியுமா..? - TN BEST POLICE STATION

2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் சிறந்த முதல் மூன்று காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்கினார்.

விருது பெற்ற காவல்துறையினருடன் முதல்மைச்சர்
விருது பெற்ற காவல்துறையினருடன் முதல்மைச்சர் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2025, 8:31 PM IST

சென்னை: நாட்டின் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று (ஜன.26) தமிழ்நாட்டின் சிறந்த முதல் மூன்று காவல் நிலையங்களுக்கு முதலமைச்சரின் கோப்பைகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்கள் ஆகியவற்றில் உள்ள காவல் நிலையங்களில் சிறப்பாக செயல்பட்டு குற்றங்களை குறைத்தல். உடனடியாக நடவடிக்கை எடுத்தல் போன்ற திறன்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதனடிப்படையில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

முதல் பரிசு

அதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக மதுரை மாநகரத்தை சேர்ந்த எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம் முதலிடத்தை பெற்றது. இதற்கான விருதை இன்று முதலமைச்சரிடம் காவல் ஆய்வாளர் கே. காசி பெற்றுக் கொண்டார். விருதைப் பெற்றுக் கொண்டப் பின்னர் காவல் ஆய்வாளர் காசி கூறும்போது, '' காவல் நிலையத்திற்கு வரும் புகார்களை விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் பொது மக்கள் புகார் அளிக்க வந்தால் அவர்களின் புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், திருவிழா காலங்களில் எந்தவிதமான குற்றச் செயல்களும் நடைபெறாமலும் தடுத்து வருகிறோம். பண்டிகை காலங்களிலும் குடும்பத்தை விட பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறோம்'' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை அரசு அலுவலகங்களில் நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டம்!

இரண்டாம் பரிசு

திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையத்திற்கான 2ம் இடம் பெற்றது. அதற்கான விருதை காவல் ஆய்வாளர் என். உதயகுமார் முதலமைச்சரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் பேசிய ஆய்வாளர் என். உதயகுமார், '' திருப்பூர் மாவட்டத்தில் வட மாநிலங்களில் இருந்து அதிகளவில் வந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அங்கிருந்து வரும் போதே போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனர். அதனை கண்டறிந்து அழித்து வருகிறோம். மேலும் வட மாநில மக்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்'' என தெரிவித்தார்.

மூன்றாவது பரிசு

மேலும், மூன்றாவது இடத்தைப் பிடித்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திருத்தணி காவல் நிலையத்திற்கான விருதை காவல் ஆய்வாளர் மதியரசன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், '' திருத்தணி காவல் நிலையத்தின் எல்லைப் பகுதி ஆந்திரா மாநில எல்லைப் பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் அங்கிருந்து மது பாட்டில்கள், போதைப் பொருட்கள் கடத்தி வருவதை தொடர்ந்து கண்காணித்து பிடித்து வருகிறோம். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'' என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.