ETV Bharat / entertainment

’ஏன்டி விட்டு போன’... சிம்பு குரலில் வைரலாகும் ’டிராகன்’ பாடல் ப்ரோமோ! - EN DE VITTU PONA SONG PROMO

En de vittu pona song Promo: சிலம்பரசன் பாடியுள்ள ’டிராகன்’ படத்தின் மூன்றாவது பாடல் ’ஏன்டி விட்டு போன’ ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிராகன் பாடல் ப்ரோமோ போஸ்டர்
டிராகன் பாடல் ப்ரோமோ போஸ்டர் (Credits - @Dir_Ashwath X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 27, 2025, 1:33 PM IST

சென்னை: ’டிராகன்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் ’ஏன்டி விட்டு போன’ பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘டிராகன்(Dragon)’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார்.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ’கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ’லவ் டுடே’ என்ற திரைப்படத்தை தானே இயக்கி, நடித்தார்.இப்படம் மூலம் இளைஞர்களுக்கு பிடித்தமான கதாநாயகனாக மாறிய பிரதீப் ரங்கநாதன் தற்போது அஹ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் அஷ்வத் மாரிமுத்துவின் மேக்கிங் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அசோக் செல்வன், ரித்திகா சிங் கெமிஸ்ட்ரி கவனம் பெற்றது. இதுமட்டுமின்றி கதைப்போமா உள்ளிட்ட இப்படத்தின் பாடல்கள் படமாக்கப்பட்ட விதமும் இளைஞர்களை கவர்ந்தது. இதனையடுத்து கல்லூரி நண்பர்களான அஷ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் ஆகியோரது கூட்டணியில் உருவாகும் டிராகன் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டிராகன் படத்தின் முதல் பாடல் rise of dragon வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பொங்கல் பபண்டிகைக்கு இரண்டாவது சிங்கிள் ‘வழித்துணையே’ பாடல் வெளியானது. சித் ஸ்ரீராம் குரலில் இந்த பாடலும் ஹிட்டானது. இந்நிலையில், டிராகன் படத்தின் மூன்றாவது சிங்கிள் ’ஏன்டி விட்டு போன’ பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார்.

இதையும் படிங்க: "ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை நிராகரித்தேன்" - 'Empuraan' பட நிகழ்ச்சியில் பிருத்விராஜ் பேச்சு! - EMPURAAN TEASER LAUNCH

இந்த பாடலின் ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டிராகன் படக்குழு ப்ரமோஷன்களில் ஆரம்பம் முதல் வித்தியாசம் காட்டி வருகிறது. அந்த வகையில் மூன்றாவது பாடலின் ப்ரோமோவும் கலகலப்பாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த ப்ரோமோவில் படக்குழுவினர் பாணியில் சிலம்பரசன், அஷ்வத் மாரிமுத்துவிடம், “அடுத்த படத்திற்கு என்கிட்ட தான வந்தாகணும், உன்ன கதறவிட்ற” என கூறுகிறார். சிலம்பரசன் பாடியுள்ள டிராகன் படத்தின் மூன்றாவது பாடல் நாளை (ஜன.28) வெளியாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.