ETV Bharat / state

வேலூரில் பைனான்சியர் கொடூர கொலை.. மகளை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பியபோது கொடூரம்! - VELLORE FINANCIER MURDER

வேலூரில் 6 ஆயிரம் ரூபாய்க்காக பைனான்சியர் ஒருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் பைனான்சியர் கொலை. கொல்லப்பட்ட செந்தில்குமார்  (மேலிருந்து இடது வெள்ளை சட்டை )
வேலூரில் பைனான்சியர் கொலை. கொல்லப்பட்ட செந்தில்குமார்  (மேலிருந்து இடது வெள்ளை சட்டை ) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2025, 6:38 PM IST

வேலூர்: வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சேண்பாக்கம் ராகவேந்திரா கோயில் அருகே வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக, போலீசாருக்கு கடந்த 24 ஆம் தேதி அன்று தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு உடல் முழுவதும் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு சம்பவம் நடந்த பகுதியில் மோப்ப நாய் சாரா உதவியோடு சோதனை நடத்தப்பட்டது. அப்போது மோப்ப நாய் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை ஓடி நின்றது.

மேலும், சம்பவ இடத்தில் ரத்தக்கறையுடன் ஸ்கூட்டி பெப் வண்டியும் இருந்துள்ளது. அதில் இருந்த பதிவெண்ணை கொண்டு கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை போலீசார் அடையாளம் கண்டனர்.

பைனான்ஸ் தொழில்

தொடர்ந்து போலீசார் விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட நபர் வேலுார் அருகே செங்காநத்தம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (38) என்பது தெரிய வந்தது. இவர் வாகனங்களுக்கு கடன் வழங்குவது, வட்டிக்கு பணம் கொடுப்பது என்று பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது அலுவலகம், சலவன் பேட்டை பகுதியில் இயங்கி வருகிறது.

இதையும் படிங்க: 'வெடிகுண்டு இருக்கு'.. சென்னை நோக்கி வந்த விமானம்.. நடுவானில் நடந்த களேபரம்!

மேலும், இவர் கடந்த 24 ஆம் தேதி காலை தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகம் செல்வதாக மனைவி மஞ்சுளாவிடம் கூறிவிட்டு சென்ற நிலையில், காலை 12 மணி அளவில் ராகவேந்திரா கோயில் அருகே சடலமாக கிடந்துள்ளார். அதோடு செந்தில்குமாரை ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

சிசிடிவி காட்சி

அதேநேரம் கொலையாளிகள் யார், எதற்கு கொலை செய்தனர் என்று போலீசார் ஒருபக்கம் விசாரணை மேற்கொண்ட நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் அமைந்திருக்கும் கோயிலின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கொலை செய்யப்பட்ட செந்தில்குமாருடன் ஒருவர் நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் சிசிடிவி கேமராவில் சிக்கிய நபர் குறித்து விசாரித்து, போலீசார் அவரை பிடித்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த பரந்தாமன் என்பதும், அவர் தான் கொலை செய்தது என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பாபு என்கின்ற பரந்தாமனை பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், வேலூர் தோட்டபாளையத்தை சேர்ந்த பரந்தாமனுக்கு செந்தில்குமார் ஆறு மாதத்திற்கு முன்பு ரூ.30,000 பணத்தை கடனாக கொடுத்துள்ளார். அதில், ரூ.23 ஆயிரத்தை பரந்தாமன் திருப்பி கொடுத்துள்ளார். இந்நிலையில், மீதமிருந்த ரூ.6 ஆயிரத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாகவும், அதை திரும்ப கேட்டதற்கு இந்த கொலை சம்பவம் அரங்கேறி இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.