சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோஸ் பட்லர் 30 பந்துகளில் 45 ரன்கள் (4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்து அபாரமாக ஆடினார். பிரையன் கார்ஸ் 17 பந்துகளில் 31 ரன்கள் (1 பவுண்டரி, 3 சிக்சர்கள்) எடுத்து அசத்தினார். இந்திய அணி தரப்பில் வரூண் சக்ரவர்த்தி மற்றும் அக்ஷர் படேல் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 166 ரன்களை இலக்காக இந்திய அணிக்கு நிர்ணையிக்கப்பட்டது. இந்திய அணிக்கு தொடக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா (12) மற்றும் சஞ்சு சாம்சன் (12) ஆகியோர் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் (12) மற்றும் ஹர்திக் பாண்டியா (7) ஆகியோராலும் அதிக நேரம் தாக்கு பிடித்து விளையாட முடியவில்லை.
Off-stump out of the ground!
— BCCI (@BCCI) January 25, 2025
Varun Chakaravarthy gets his second 🔥🔥
Follow The Match ▶️ https://t.co/6RwYIFWg7i#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/HPb865qPVJ
இந்த நிலையில் மூன்றாவது வீரராக களமிறங்கிய திலக் வர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 55 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உடன் அரைசதம் (72*) அடித்து அணியை வெற்றியின் விளிம்பிற்கு கொண்டு சென்றார். வாஷிங்டன் சுந்தர் 19 பந்துகளில் 26 ரன்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து நல்ல பங்களிப்பு அளித்தார்.
Innings Break!
— BCCI (@BCCI) January 25, 2025
Another fine bowling display from #TeamIndia 👏👏
England have set a 🎯 of 1⃣6⃣6⃣
Scorecard ▶️ https://t.co/6RwYIFWg7i#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/nGGmdVEU3s
Tilak Varma's lone-warrior knock seals the deal as India pull off a heist in Chennai 🔥#INDvENG 📝: https://t.co/TJhpIpkNYJ pic.twitter.com/rFzNZySrpV
— ICC (@ICC) January 25, 2025
இறுதி ஓவரில் இந்தியாவுக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், திலக் வர்மா 2 ரன்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இங்கிலாந்து தரப்பில் பிரையன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக தனது பவுலிங் திறனை வெளிப்படுத்தினார். மேலும், ஜேமி ஒவெர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க் வூட் மற்றும் லியம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.