வாஷிங்டன்: அமெரிக்காவில் முதலீடு செய்பவர்களுக்கு விசா வழங்க இதுவரை கடைபிடித்து வந்த 35 ஆண்டுகால நடைமுறைக்கு மாறாக 5 மில்லியன் டாலர் முதலீடு செய்பவர்களுக்கு குடியுரிமை வழங்கும் கோல்டு கார்டு விசா நடைமுறையை அறிமுகம் செய்வதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு டிரம்ப்,"அவர்கள் செல்வவளம் மிக்கவர்களாக இருப்பார்கள், அவர்கள் வெற்றிகரமான நபர்களாக இருப்பார்கள், அவர்கள் பெரும் அளவு பணத்தை செலழிப்பார்கள், அதிக அளவு வரி செலுத்துவதுடன், அதிகம் பேருக்கு வேலை தருபவர்களாக இருப்பார்கள். அது மிகவும் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட உள்ளதாக நான் கருதுகின்றேன், " என்றார்.
இது குறித்து பேசிய வர்த்தக துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக்,"இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பழைய EB-5 விசா நடைமுறைக்கு மாறாக டிரம்ப்பின் கோல்டு கார்டு அறிமுகப்படுத்தப்படும். EB-5 என்ற நடைமுறை கடந்த 1990ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒரு மில்லியன் டாலர் செலவழிக்கும் திறன்பெற்ற 10 பேருக்காவது வேலை அளிக்கும் நிறுவனத்துக்கு இந்த விசா வழங்கப்பட்டு வந்தது.
டிரம்ப் அறிவித்துள்ள கோல்டு கார்டு என்பது பொதுவாக ஒரு கிரீன் கார்டு போன்றதாகும் அல்லது நிரந்தரமான சட்டரீதியான அமெரிக்கராக வசிப்பதற்கான அனுமதியாகும். இதன் மூலம் முதலீட்டாளர்களை அனுமதிப்பதற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. EB-5 விசா திட்டத்தில் முறைகேடு உள்ளிட்டவை இருந்தது. இது புதிய திட்டத்தில் இருக்காது. இதர கிரீன்கார்டு திட்டங்களைப் போல இது குடியுரிமையை நோக்கிய வழியை உள்ளடக்கியதாக இருக்கும்,"என்றார்.
இதையும் படிங்க: புனிதர் பட்டத்துக்கான நபர்கள் தேர்வு.. மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் ஆலோசனை!
பாதுகாப்புத்துறையின் குடியேற்ற புள்ளிவிவரத்தின் ஆண்டு தொகுப்பின்படி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான 12 மாதங்களில் 8,000 பேருக்கு முதலீட்டாளர் விசா வழங்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆய்வு சேவையின்படி EB-5 விசா நடைமுறையில், சட்டப்படியான கிடைக்கக் கூடிய நிதியை சரி பார்ப்பது உட்பட முறைகேடு நடப்பதற்கான அபாயம் கொண்டதாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் முதலீட்டாளர் விசா நடைமுறை என்பது பொதுவான ஒன்று. இது குறித்து பேசிய ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம்,"அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், கிரேக்கம், மால்டா, ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி உள்ளிட்ட உலகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் தனிப்பட்ட செல்வந்தர்களுக்கு கோல்டு கார்டுகளை வழங்குகின்றன,"என்றார்.
வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து டிரம்ப் ஏதும் குறிப்பிடவில்லை. EB-5 விசா வழங்கப்படும் எண்ணிக்கை வரைமுறைக்கு உட்பட்டதாகும். மேலும் பேசிய டிரம்ப், "பற்றாக்குறையை குறைக்க அமெரிக்க அரசு 10 மில்லியன் கோல்டு கார்டுகளை விற்பனை செய்யும். இது சிறந்ததாக இருக்கும். அற்புதமானதாகவும் இருக்கும்.
இது கிரீன் கார்டு போன்றதுதான். ஆனால், உயர்ந்தபட்ச அதி நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. செல்வ வளம் படைத்தவர்கள் அல்லது சிறந்த திறமை படைத்த மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான வழியாகும். செல்வ வளம் மிக்க மக்கள், திறன் படைத்தவர்களை பெறுவதற்காக பணம் செலுத்தலாம். திறன் படைத்தவர்கள் நீண்டகாலம், நீண்ட கால அந்தஸ்துடன் அமெரிக்காவில் இருப்பதற்கு நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை பெறுவதற்கான தகுதிகளை நாடாளுமன்றமே தீர்மானிக்கும். ஆனால், கோல்டு கார்டு பெறுவதற்கு இது போன்று நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை என்று கூறப்படுகிறது.