ETV Bharat / sports

“விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி” - ஆதவ் அர்ஜுனா! - AADHAV ARJUNA ABOUT NATIONAL GAMES

விளையாட்டு வீரர்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி என 38வது தேசிய விளையாட்டுப் போட்டிக்கு வீரர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன்
சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2025, 12:27 PM IST

சென்னை: உத்தரகாண்டில் வருகிற ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியானது, உத்தரகாண்டின் முக்கிய நகரங்களில் 11 மையங்களில், 31 பிரிவுகளின் கீழ் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் 393 வீரர்களுகளை தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தலைமையில் விளையாட்டு உபகரணங்களை வழங்கப்பட்டு, நேற்று (ஜன.25) வழியனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுடன் 102 அதிகாரிகள் கொண்ட குழு என மொத்தம் 495 பேர் உத்தரகாண்ட் சென்றுள்ளனர்.

முன்னதாக, அவர்களை வழியனுப்பும் வகையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 'வழியனுப்பும் நிகழ்ச்சியானது' நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் செந்தில் தியாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) பொது மேலாளர் சுஜாதா ஆகியோர் பங்கேற்று போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் அணிவகுப்புக்கான அதிகாரப்பூர்வ சீருடைகள் அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து வீரர்களுக்கான சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.

அப்போது பேசிய தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர் ஐசரி கணேஷ், “குஜராத் மாநிலத்தில் நடந்த போட்டியில் தமிழ்நாடு அணி ஐந்தாம் இடம் பெற்றது. அதற்கு அடுத்து கோவாவில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி பத்தாம் இடத்தை பெற்றது. இதற்கு காரணம் ஒலிம்பிக்கில் இடம்பெறாத போட்டிகள் அங்கு நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு முதல் மூன்று இடத்திற்குள் தமிழ்நாடு வரவேண்டும். இதனை மனதில் வைத்துக் கொண்டு வீரர்கள் விளையாட வேண்டும். வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். வீரர்கள் தங்கம் வெல்வதை மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும்” என கூறினார்.

பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர், “தமிழ்நாடு துணை முதலமைச்சர் விளையாட்டு துறைக்கு அமைச்சராக இருப்பதால் தமிழ்நாட்டு அரசு வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: பத்ம பூஷன் விருது: "மனைவியும், தோழியுமான ஷாலினிக்கு நன்றி" - நடிகர் அஜித்!

மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து நிதி உதவிகளையும் நாங்கள் செய்து தருவோம். விளையாட்டு வீரர்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் உருவாக வாய்ப்புகள் உள்ளது.

இதற்காக தமிழக அரசுக்கு நன்றி. எனவே வீரர்கள் மெடல் வெல்லும் பொழுது அவர்களுக்கு அரசுத் துறையில் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைகள் வழங்கப்படும். இதனை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வீரர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும் போது அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய, அந்த மாநில காவல்துறையுடன், தமிழக காவல்துறை பேச வேண்டும். இனிவரும் காலங்களில் வீரர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.