ETV Bharat / state

"தமிழக மீனவர்கள் கைது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்" - முதலமைச்சர் கடிதம்! - STALIN LETTER ON FISHERMEN ARREST

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2025, 7:07 AM IST

Updated : Jan 27, 2025, 11:27 AM IST

சென்னை: இந்திய மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அத்துடன் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், பின்னர் அவர்களை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்புவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டதன் பின் இதுகுறித்து சுமுக முடிவு காணப்படும் என இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருந்த போதிலும் இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைக்குத் தீர்வின்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.27) கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், "ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் (ND-TN-10-MM-772, IND-TN-10-MM-702 மற்றும் IND-TN-10-MM-291) மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே ஜனவரி 25ஆம் தேதியன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்துவதோடு அவர்களது எதிர்காலத்தை நிச்சயமற்றதாகவும், இருண்டதாகவும் ஆக்கியுள்ளது. எனவே, நமது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க: வருகின்ற தேர்தலில்.. மதுரை அரிட்டாபட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும் தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமீப காலமாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டு சொந்து ஊருக்கு திரும்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சிறையில் உள்ள இந்த மீனவர்களும் விரைவில் விடுக்கப்பட வேண்டும் எனக் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Last Updated : Jan 27, 2025, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.