ETV Bharat / state

'2026 தேர்தலுக்குப் பிறகு பாஜக-வின் கொத்தடிமையாக திமுக இருக்கும்' - அதிமுக ஜெயக்குமார்! - ADMK JAYAKUMAR

நாங்கள் கொத்தடிமை இல்லை; 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க தான் பாஜகவுக்கு கொத்தடிமையாக இருக்கப் போகிறது என அதிமுக ஜெயக்குமார் பேசியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2025, 8:06 PM IST

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை எனவும், பா.ஜ.க உடன் எந்த கூட்டணியும் இல்லை எனவும், பெரியாரை யார் வசைபாடினாலும் அரசியலில் இருந்து தனிமைப்படுத்தப் படுவார்கள் என தெரிவித்தார். மேலும், தனது கருத்துகளை அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்தார். அவற்றை கீழ் வருமாறு காணலாம்.

உலக பொருளாதார அமைப்பின் கூட்டம் சுவ்ட்சர்லாந்தில் நடைபெற்றது. இதில் உலக வணிகர்கள் மற்றும் பல்வேறு நாட்டு அரசுத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் 20 லட்சம் கோடி முதலீட்டை பெற்றுள்ளனர். அதில் 80 விழுக்காடு முதலீட்டை மகாராஷ்டிரா மாநிலம் பெற்று 16 தீர்வு ஒப்பந்தங்கள் (MOS) கையுழுத்தாகி, 15 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டையும், தெலங்கானா மாநிலம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி முதலீட்டையும் பெற்றுள்ளது.

ஆனால், தமிழ்நாடு ஒரு ரூபாய் கூட முதலீடு பெறவில்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் பணத்தில் அங்கு சென்றோம் என போட்டோ மட்டும் எடுத்து மக்களை ஏமாற்றினார்கள்.

இதையும் படிங்க: பழைய ஓய்வூதிய திட்டம் எப்போ தான் வரும்? மீண்டும் போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ ஜியோ!

அ.தி.மு.க கொத்தடிமை என முதலமைச்சர் விமர்சனம் குறித்து பேசிய அவர், கொத்தடிமையின் ஒட்டு மொத்த உருவம் தி.மு.க தான். திமுக எங்களை கொத்தடிமை என சொல்லுகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை பதிவிக்காக மட்டுமே தாரைவார்த்துள்ளனர். 2026 தி.மு.க தான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் பேசி வருகிறார். ஆனால், அது நடக்காது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் குடும்ப மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளது.

அ.தி.மு.க மீத்தேன், உதய் மின் திட்டம் என அனைத்தையும் எதிர்த்து போராடியுள்ளது. இந்த மாதம் ராமநாதபுரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் பிடிபட்ட போது, முதலமைச்சர் பொம்மை போல இருந்து கடிதம் மட்டுமே எழுதி வருகிறார். மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் பெற்று வரவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் யார் கொத்தடிமை என்பது தெரிய வரும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க கொத்தடிமையாக திமுக இருக்கும். ஆனால் எங்களை கொத்தடிமை என்று சொல்வதற்கு திமுகவிற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

கார்ப்பரேட் மாடல் மோடி அரசாங்கமும் ஸ்டாலின் மாடல் தமிழ்நாடு அரசாங்கமும் டங்டஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஒன்றுதான். திமுக கூட்டணி கட்சிகளே திமுகவை விமர்சித்து வருகிறது. தற்போது கூட்டணிக்குள் நீர் பூத்த நெருப்பாக இருக்கிறது. திமுக அரசில் கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தை கொல்லும் அளவில் உள்ளது. அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களும் நிரப்பட்டாமல் உள்ளது.

தற்போது நிரப்பப்படாமல் இருக்கிறது. வாய்மையே வெல்லும் என்ற பெயரை மாற்றி பொய்யே வெல்லும் என்று திமுக அரசு பெயர் மாற்றி வைத்துக் கொள்ளலாம் என விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிசாமி சந்தித்தால் கூட்டணி அமையும் என்பது நயினார் நாகேந்திரனின் ஆசையாக இருக்கலாம்; எங்களுடைய கருத்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி இல்லை என்பதை பொதுச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். இப்போதும் இல்லை; எப்போதும் இல்லை என்பது எங்களுடைய கருத்து.

இதையும் படிங்க: சுத்தம் பத்தல; தூத்துக்குடி 20 ரூபாய் பிரியாணி கடைக்கு சீல்?

ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்தில் அண்ணாமலையுடன் சந்திப்பு என்பது அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கலாம்; தமிழர் பண்பாடு கருதி நான் பேசினேன். அதேபோல் எங்களுடைய கட்சியையும் என்னுடைய தலைவர்களையும் விமர்சனம் செய்தால் அதற்கான பதிலடி கொடுப்பேன். இது பெரியார் மண் இது திராவிட மண்.

பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா இவர்களின் சமூக நீதி கொள்கை ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு சம உரிமை பெறுவதற்கும், பொருளாதார ரீதியாக உயர்வதற்கும், கல்வி ரீதியாக தத்துவங்களை போதித்த தந்தை பெரியாரை சீமானாக இருந்தாலும், யார் சிறுமைப்படுத்தினாலும் தமிழக அரசியலில் இருந்து தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகும். இன்று மட்டுமல்ல இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு கழிந்தாலும் பெரியாரை பற்றி தமிழகம் பேசும்.

இவ்வாறு மேற்கூறப்பட்ட கருத்துகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.