ETV Bharat / state

பொது சிவில் சட்டம் மற்ற மாநிலங்களிலும் கொண்டு வரப்படும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் - L MURUGAN

உத்தரகாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் மற்ற மாநிலங்களிலும் கொண்டுவரப்படும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறினார்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன்
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2025, 7:41 PM IST

தஞ்சாவூர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பாஜக ஆளும் அம்மாநிலத்தில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், விரைவில் மற்ற மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் பாஜக தெற்கு மாவட்ட புதிய தலைவர் அறிவிப்பு கூட்டம் இன்று (ஜன.27) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன் கூறுகையில், ''அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது எங்கள் கட்சியின் பிரதான கொள்கையாக இருந்தது. சுமுகமாக ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டது. அதே போல அனைத்து மக்களும் சமமாக சட்டம் இருக்க வேண்டும் என்பதற்காக பொது சிவில் சட்ட கொள்கையை வைத்திருந்தோம். அதன்படி, பாஜக ஆளும் மாநிலமான உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் வந்துள்ளது.

அதே போல பொது சிவில் சட்டம் மற்ற மாநிலங்களிலும் ஒவ்வொன்றாக கொண்டு வரப்படும். திமுக 7வது முறையாக ஆட்சி அமைக்கும் என்பது அவர்களது பகல் கனவு. வரிக்கு மேல் வரி போடுகிறார்கள், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திர பதிவு செலவு உயர்வு என மக்கள் மீது சுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: மாவட்ட தலைவர் தேர்தல் எதுக்கு நடத்துறீங்க? எல்.முருகன் முன்பு கொந்தளித்த பாஜகவினர்!

எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடை, கஞ்சா விற்பனை போன்ற மக்கள் விரோத நடவடிக்கையால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள்.

திமுக மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். தமிழ்நாடு ஆளுநரை எதற்கெடுத்தாலும் எதிர்க்க வேண்டும் என்கிற மனநிலையில் திமுக அரசு உள்ளது. ஆளுநர் மீது தொடர் தாக்குதலை திமுக நடத்தி வருகிறது. ஆளுநர் மீது தமிழ்நாடு அரசு தொடர்ந்து வன்மத்தை கக்கி வருகிறது. தமிழ்நாட்டின் நலனுக்கு இது நல்லதல்ல'' என்று கூறினார்.

மேலும், இந்தப் பேட்டியின் போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.