ETV Bharat / state

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,500 வரை சேமிப்பு.. அமைச்சர் சக்கரபாணி குஷி தகவல்! - TN RATION CARD HOLDERS

தமிழ்நாட்டில் புதிதாக 100 அமுதம் அங்காடிகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடை கோப்புப்படம், அமைச்சர் சக்கரபாணி
ரேஷன் கடை கோப்புப்படம், அமைச்சர் சக்கரபாணி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2025, 8:50 PM IST

கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று (ஜன.28) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய ரேஷன் கடைகள்

கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், '' கடந்த மூன்று ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 53 முழு நேர மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் தேவைப்படும் இடங்களில் புதிய ரேஷன் கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்க தயாராக உள்ளது'' என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, '' கடந்த 45 மாத கால ஆட்சியில் தமிழ்நாட்டில் புதிதாக 17.50 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் 5,264 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆய்வு கூட்டம்
ஆய்வு கூட்டம் (credit - ETV Bharat Tamil Nadu)

கரூர் மாவட்டத்தில் புதிதாக 53 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக உள்ள கோவை மாவட்டத்திற்கு 100 ரேஷன் கடைகள் ஒரே நாளில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 2,500 முழு நேர மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் 639 ரேஷன் கடைகள் மூலம் மூன்று லட்சத்து 38 ஆயிரத்து 198 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நெல் குவிண்டாலுக்கு சன்ன ரகத்திற்கு 1,960 ரூபாய், பொது ரகத்திற்கு 1,905 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நடவடிக்கையாக கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இது 2,450 ரூபாயாக வழங்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சக்கரபாணி
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சக்கரபாணி (credit - ETV Bharat Tamil Nadu)

சேமிப்பு கிடங்குகள்

தமிழ்நாடு முழுவதும் 103 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இவற்றில் தார்ப்பாய் மூலம் நெல்களை பாதுகாக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு நெல்மணி கூட மழையில் நனைந்து வீணாக கூடாது என்பதற்காக நபார்டு வங்கி மூலம் நிதிகள் பெறப்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டு, 300 சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நெல்கள் மழையில் நனைவது தடுக்கப்படும். தமிழ்நாட்டில் 376 அரவை ஆலைகள் மூலம் நெல் அரைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தற்போது 700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரிசி தேவைப்படுகிறது

மாதத்திற்கு ரேஷன் கடைகள் மூலம் 3.76 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தலைவராக கொண்டு ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி வழங்கலாம். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தில் 3.76 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. ஆனால் நமது மாநிலத்தில் உற்பத்தி போதுமானதாக இல்லை. இதனால், வெளிமாநிலத்தில் இருந்து அரிசி விலை கொடுத்து வாங்கி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் 100 அமுதம் அங்காடிகள் சீரமைக்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் இரண்டு அமுதம் அங்காடிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 முதல் 1,500 வரை சேமிப்பு ஏற்படும்'' என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.