ஹைதராபாத்: இந்தியாவில சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியிலும், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், மூன்று போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தமது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு,தொடக்க வீரரான பென் டக்கட்டும், கேப்டன் ஜோஸ் பட்லரும அருமையான துவக்கத்தை தந்தனர்.
பென் டக்கட் 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அக்ஷர் படேல் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். அவர் குவித்த ரன்களில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.
Innings Break! #TeamIndia limit England to 171/9 in Rajkot!
— BCCI (@BCCI) January 28, 2025
5⃣ wickets for Varun Chakaravarthy
2⃣ wickets for Hardik Pandya
1⃣ wicket each for Axar Patel & Ravi Bishnoi
Stay Tuned for India's chase! ⌛️
Scorecard ▶️ https://t.co/amaTrbtzzJ#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/rZDaKwjCpM
பென்னை தொடர்ந்து, ஜோஸ் பட்லரும் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியில் மாயாஜால சுழலில் சிக்கி ஆட்டமிழ்ந்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய லிவிங்ஸ்டோன் தமது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து லிவிங்ஸ்டோன் அவுட்டானார். அவர் விளாசிய ரன்களில் 5 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடங்கும்.
அவரை அடுத்து வந்க இங்கிலாந்து அணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது.
இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.