ETV Bharat / state

மருதமலையில் ஆசியாவிலேயே உயரமான முருகன் சிலை.. 160 அடிக்கு அமைக்க திட்டம் - அமைச்சர் சேகர் பாபு தகவல்! - MARUDHAMALAI MURUGAN STATUE

மருதமலை முருகன் கோயிலில் 160 அடிக்கு முருகன் சிலை அமைப்பது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.

முருகன் உருவப்படம், அமைச்சர் சேகர் பாபு ஆய்வு
முருகன் உருவப்படம், அமைச்சர் சேகர் பாபு ஆய்வு (credit - @tnhrcedept, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2025, 8:14 PM IST

கோயம்புத்தூர்: கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று (ஜன.27) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோயிலில் 160 அடிக்கு முருகர் சிலை அமைப்பது தொடர்பாகவும், கோயிலை ஒட்டி பட்டா இல்லாத இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், '' தமிழ் கடவுள் முருகன் கோயில்கள் அதிகளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன. 90 முருகன் கோயில்களில் குட முழுக்கு இடம் பெற்று இருக்கிறது. திமுக ஆட்சிக்கு பிறகு 60-70 வயது உள்ளவர்களுக்கு அரசு கட்டணத்தில் சிறப்பு தரிசனம் செய்து கொடுத்து வருகிறோம்.

பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை உள்ளிட்ட ஏழு முருகர் கோயில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முடி காணிக்கை மண்டபம், அன்னதான கூடம் ஆகியவை மருதமலை கோயிலில் ஏற்படுத்தப்படவுள்ளன. முருகன் திருக்கோயில்களில் பக்தர்கள் அதிகரித்து வருவதால் அனைத்து புதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. லிப்ட் வசதி ஏப்ரல் மே மாதத்தில் முழுமையாக பக்தர்கள் பயன்பாட்டு வந்துவிடும்.

மருதமலை கோயிலில் நடக்கும் பணிகள்
மருதமலை கோயிலில் நடக்கும் பணிகள் (credit - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: யூ.ஜி.சி.-யின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெறும் வரை ஒய மாட்டோம் - அமைச்சர் கோவி.செழியன்!

மருதமலை முருகன் கோயிலில் ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்ட 160 அடி கல்லால் ஆன முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளியங்கிரி கோயிலுக்கு விரைவில் அறங்காவலர்கள் அமைக்கப்பட உள்ளனர். அங்கு 21 கோடி ரூபாய் செலவில் ஏற்கனவே பணிகள் நடந்து வருகின்றன. மலை ஏறுபவர்களுக்கு மருத்துவ சோதனை செய்ய கூடுதல் ஏற்பாடு செய்யப்படும்.

தைப் பூசத்திற்கு கூடுதலாக அன்னதானம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அன்னதானம் வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு ஒரு சில தினங்களில் நல்ல முடிவு எடுக்கப்படும். கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் அன்னை தமிழில் தான் குட முழுக்கு நடைபெறும்'' என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் உட்பட அறநிலையத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.