ETV Bharat / state

ஜகபர் அலி கொலை வழக்கு: முதற்கட்டமாக மனைவியிடம் விசாரணையை துவக்கியது சிபிசிஐடி! - JAGABAR ALI MURDER CASE

புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளை தொடர்பாக புகார் கொடுத்த ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்கினர்.

ஜகபர் அலி கோப்புப்படம், விசாரணை நடந்த இடம்
ஜகபர் அலி கோப்புப்படம், விசாரணை நடந்த இடம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2025, 10:50 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. இவர் கடந்த 17ம் தேதி, தமது வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றுவிட்டு டூ வீலரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த மினி டிப்பர் லாரி மோதியதில் ஜகபர் அலி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த திருமயம் காவல்துறையினர் ஜகபர் அலி உடலை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். அங்கு வந்த ஜகபர் அலியின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டினர். மேலும் அவர்கள், திருமயம் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகளுக்கு எதிராக கபர் அலி வழக்கு தொடர்ந்துள்ளார்.

கனிமவள கொள்ளையை தடுக்க தொடர்ந்து போராடி வந்த இவரை திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம். எனவே காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தி தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், இதுகுறித்து திருமயம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் திட்டமிட்டு ஜகபர் அலியை விபத்தை ஏற்படுத்தி படுகொலை செய்ததாக தெரிய வந்தது

இதையும் படிங்க: வேலூரில் பைனான்சியர் கொடூர கொலை.. மகளை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பியபோது கொடூரம்!

இந்நிலையில், இதனை கொலை வழக்காக மாற்றி குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ், மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், அவரது ஓட்டுநர் காசி, குவாரி உரிமையாளர் ராமையா ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக வழக்கு ஆவணங்கள் அனைத்தும் நேற்று சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிபிசிஐடி ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் இன்று (ஜன.26) விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்டமாக பல்வேறு புகார்களை தெரிவித்திருந்த வெங்களூரில் உள்ள ஜகபர் அலி மனைவியிடம் விசாரணையை துவக்கியுள்ளனர். ஜகபர் அலி மனைவி மரியம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இன்று விசாரணை நடந்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக விரைவில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.