மேஷம்: இந்த வாரம் இனிய வாரமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் வேலையை மாற்ற விரும்பினால் இது சரியான தருணம் அல்ல. சளி, இருமல் போன்ற பிரச்சினைகளால் நீங்கள் அவதிப்பட நேரலாம். இந்த வாரத் தொடக்கத்தில் உங்களுக்கு நிதி சிக்கல்கள் இருக்கலாம், ஆனால் அவை அனைத்தும் வார இறுதிக்குள் சரியாகிவிடும்.
காதல் உறவில் தவறான புரிதல்கள், தவறான கருத்துக்களினால் இருவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இளைஞர்கள் கல்லூரிகளை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தால் அதை முன்கூட்டியே தேர்ந்து எடுப்பது நல்லது. நீங்கள் ஒரு தொழில்முறை பயிற்சியில் சேர விரும்பினால், இப்போதே அதற்கான சாதகமான தருணமாக அமையும்.
ரிஷபம்: இந்த வாரம் யோகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் வேலைகளை மாற்ற வேண்டும் என முடிவு செய்தால், இப்போது அதற்கான நல்ல நேரம் தான், உங்களுக்கு உயர்ந்த பதவியும் கிடைக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைப்பவர்களுக்கு நல்ல சாதகமான பலன்களே கிடைக்கும். இந்த வாரம் வீட்டைப் புதுப்பித்தல் அல்லது கார் வாங்குவதற்கு என, செலவிட உங்கள் கையில் அதிக பணப்புழக்கம் உள்ளது. உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு புகழ்பெற்ற மருத்துவரை அணுகி மருத்துவ உதவியை நாடுங்கள். இல்லையெனில், உடல்நலப் பிரச்சினைகளின் விளைவாக நீங்கள் மன அழுத்தத்தை அனுபவிக்கலாம். உங்களுக்கும் உங்கள் காதல் துணைக்கும் இடையில் ஏற்படக்கூடிய எந்தவொரு குழப்பத்தையும், நீக்குவதற்கு தெளிவாகவும் அக்கரையுடனும் இருப்பது மிக முக்கியம். உங்கள் செயல்கள் மற்றும் வார்த்தைகள் காரணமாக திருமண உறவில் உங்கள் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பிரிவு கூட ஏற்படலாம்.
மிதுனம்: இந்த வாரம் யோகமான வாரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நேரம். நீங்கள் வேலையை மாற்ற விரும்பினால் உங்களுடைய மனதுக்கு உகந்த வேலை கிடைக்கும். செலவு மிக அதிகமாக இருக்கும். நீங்கள் பொருட்களை வாங்குவதற்கும், பயணத்திற்கும் அதிக பணம் செலவழிக்கலாம். தொடர்ந்து உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும், ஆனால் பழைய நோய் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள் ஏதாவது போட்டிக்குத் தயாராகிறார்கள் என்றால் அவர்களின் நம்பிக்கை மிக வலுவாக இருக்க வேண்டும். இந்த வாரம், உங்கள் மனம் கவர்ந்தவருடனான உங்கள் பிணைப்பை மேலும் உறுதிப்படுத்தும் வாரமாக அமையும். காதல் துணையுடனான உரையாடலை இனிமையாக வைத்திருக்க வேண்டும்.
கடகம்: இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடும். பதவி உயர்வு கூட கிடைக்கலாம். வியாபாரம் செய்பவர்களுக்கும் இந்த வாரத்திலிருந்து பல நன்மைகள் ஏற்படலாம். இந்த வாரம் கண் தொடர்பான ஏதாவது ஒரு பிரச்சினை உங்களுக்கு ஏற்படலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில், நீங்கள் கவனக்குறைவாகச் செயல்படக் கூடாது.
இந்த வாரம், உங்கள் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது உங்களுக்கு யோகத்தைக் கொடுக்கலாம். காதல் துணையுடன் வெளியே செல்லலாம். இதனால் நீங்கள் தனிமையாக உணரமாட்டீர்கள். மாணவர்களைப் பொறுத்த வரையில் ஆராய்ச்சி மற்றும் அறிவை விரிவுபடுத்த இந்த வாரம் பயனுள்ளதாக இருக்கும். நீங்களும் உங்கள் நண்பர்களும் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிட வேண்டாம். அதற்கு பதிலாக, உங்கள் யோசனைகளை செயல்படுத்த நீங்கள் போதுமான அளவு தயாராக இருக்க வேண்டும்.
சிம்மம்: இந்த வாரம் அமோகமாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் செய்யும் முயற்சிகளால் உங்கள் மேற்பார்வையாளர் மகிழ்ச்சியடைவார். நீங்கள் எந்த வகையான மோதலிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த வாரம் உங்களுக்கு ஊதிய உயர்வோ அல்லது பதவி உயர்வோ பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நாள்பட்ட நோயைக் கவனிக்காமல் புறக்கணித்ததின் விளைவாக இந்த வாரம் அதிக சிக்கல்களை நீங்கள் அனுபவிக்கலாம்.
இந்த வாரம் நீங்கள் முக்கியமான ஒன்றில் முதலீடு செய்யத் திட்டமிட்டால், நிபுணர்கள் அல்லது வேறு யாரிடமாவது ஆலோசனை பெறுங்கள். உங்கள் முன்னாள் காதல் துணையை மீண்டும் சந்திக்க நேரலாம். இதன் விளைவாக உங்கள் உறவு மீண்டும் மலரவாய்ப்புள்ளது. உங்கள் இல்வாழ்க்கையைப் பொறுத்தவரை அனைத்தும் அதிர்ஷ்டமாகவே இருக்கும், மேலும் தம்பதிகள் அன்புடனும் நல்லிணக்கத்துடனும் இருப்பார்கள்.
கன்னி: இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும். வேலையை மாற்ற விரும்புவோருக்கு இந்த வாரம் நன்மை பயக்கும். நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில் தற்போது, வெளிநாட்டுத் தொடர்புகள் உங்கள் வியாபாரத்திற்கு மிகவும் சிறந்த பயனளிக்கும். நிலம் வாங்க அல்லது விற்க விரும்புபவர்கள் சிறிது காலம் காத்திருக்க நேரலாம். அவ்வாறு செய்ய இது சரியான சமயம் அல்ல.
மாணவர்களைப் பொறுத்த வரையில் இந்த வாரத்தில் அவர்களின் கல்வித் தரம் நன்றாக இருக்கும். இருப்பினும், சோசியல் மீடியாவில் சிட்சாட் செய்வது உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் நீண்ட காலமாக அவருடன் உறவிலிருந்திருந்தால், நீங்கள் இறுதியில் அவரையே திருமணம் செய்து கொள்ளலாம். உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் ஒரு விருந்தை ஏற்பாடு செய்யலாம்.
துலாம்: இந்த வாரம் நன்றாகவே இருக்கும். வேலையை மாற்ற நினைக்கும் உத்தியோகஸ்தர்களுக்கு, இந்த வாரம் உகந்ததல்ல சூழ்நிலை சாதகமாக இல்லை. இதேபோல், தொழில்முனைவோர் எந்தவொரு குறிப்பிடத்தக்க முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு சிறிது காலம் காத்திருக்க வேண்டும். நீங்கள் இப்போது நம்ப முடியாத அளவிற்கு உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக உணருவீர்கள்.
மறுபுறம், சின்னசின்ன விஷயங்களில் கூட கூர்ந்து கவனிப்பது அல்லது அதில் கூக்கை நுழைப்பது போன்றவை உங்கள் மன நலனுக்கு தீங்கு விளைவிக்கும். ஒரு போட்டித் தேர்வுக்கு படிக்கிறீர்கள் என்றால். அதீத தன்னம்பிக்கையுடன் இருப்பது சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த வாரம் உங்கள் பணத்தை சொத்து அல்லது கார் வாங்கப் பயன்படுத்தலாம்.
விருச்சிகம்: இது ஒரு நல்ல வாரமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் புதிதாக எதையும் முயல விரும்பினால் சற்று அமைதியாக இருந்து சிறிது காலம் பொறுத்து இருக்க வேண்டும். இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை உங்களுக்கு விரும்பிய முடிவுகளைத் தராது. இந்த வாரத்திலிருந்து நல்ல பயன் கிடைக்கும். இந்த வாரம் நீங்கள் நிறையப் பணம் செலவழிப்பீர்கள். நீங்கள் இப்போது உங்கள் குடும்பத்திற்காக நிறைய பணம் செலவழிக்கூடும்.
கூடுதலாக, நீங்கள் ஒரு கார் வாங்கவும், உங்கள் நிதியைப் பயன்படுத்தலாம். உங்கள் காதல் துணையுடன் நல்லிணக்கமாக வைத்திருக்க நீங்கள் உங்களை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். இந்த வாரம், தவறான கருத்துக்கள், தவறான புரிதல்கள் திருமண உறவுகளையும் பாதிக்கும். இந்த சந்தர்ப்பங்களில், அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்து மனம் விட்டுப் பேசுவது தான் சிறந்த வழி.
தனுசு: இந்த வாரம் சிறப்பாக இருக்கும். தொழில்முனைவோர் புதிய உத்திகளை செயல்படுத்தும் போது அது உங்களுக்கு சிறப்பாக பயன் கொடுக்கும். அதன் காரணமாக உங்கள் பொருளுக்கு சிறந்த விலையைப் பெறவும் உங்களுக்கு உதவும். அலுவலகத்தில் நடக்கும் அரசியலைத் தவிர்க்கவும். இந்த வாரம் சிறிது காலமாக உங்களுக்கு இருந்த எந்தவொரு நோயிலிருந்தும் நிவாரணம் பெற வாய்ப்பு உள்ளது. பொருளாதார ரீதியாக, இந்த காலகட்டத்தைப் பொறுத்தவரை பொதுவாக சாதாரணமாகவே இருக்கும்.
அத்தகைய சூழ்நிலையில் பெரிய முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ள வேண்டாம். உங்கள் வாழ்க்கை சிக்கலானதாக இருக்கலாம். இதற்கு காரணம், பரஸ்பர உறவுகளுக்கு இடையே அன்பில் ஏற்பட்ட பிரிவுதான். உங்கள் திருமண உறவைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் ஒரு அற்புதமான தருணத்தைச் செலவழித்து மகிழ்வீர்கள்.
மகரம்: இந்த வாரம் சாதகமாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு, நீங்கள் வேலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டால், இப்போதைக்கு அந்த எண்ணத்தைக் கைவிடுவது நல்லது. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் பொறுத்த வரையில் இந்த காலகட்டம் மிகவும் நன்மை பயக்கும். உங்கள் முயற்சிகளை மேலும் அதிகரிப்பது உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உங்கள் கால்களில் அல்லது முதுகில் அசௌகரியத்தை உணர்கிறீர்கள் என்றால், அதற்கு காரணம் அதிகப்படியான உடல் உழைப்பு தான்.
இந்த அதிகப்படியான சோர்வு நோய்க்கு வழிவகுக்கும். குறுகிய இடைவெளி கொடுத்து சற்று ஓய்வெடுப்பது நல்லது. மாணவர்கள் இந்த வாரம் விரும்பத்தகாத நண்பர்களுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும். இது எதிர்கால பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் காதல் உறவில் விரிசல் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அர்த்தமுள்ள தருணங்களை அனுபவிப்பீர்கள்.
கும்பம்: இந்த வாரம் யோகமான வாரமாக இருக்கும். உங்கள் தற்போதைய பணியிடத்தில் உங்கள் சிறந்த முயற்சியைத் தொடரவும். உங்கள் வியாபாரத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக நீங்கள் ரியல் எஸ்டேட் அல்லது ஆட்டோமொபைல் தொழில்களிலிருந்தால், இந்த வாரம் குறிப்பிடத்தக்க இழப்புகளைத் தவிர்க்க விழிப்புடன் இருப்பது அவசியம். நீங்கள் இப்போது ஒருவருக்கு கடன் கொடுக்க நினைத்தால், கவனமாக சிந்திப்பது புத்திசாலித்தனம். மாணவர்களுக்கு இந்த வாரம் சோம்பேறித்தனம் அதிகரிக்கலாம்.
இது உடனடியாக கவனிக்கப்படாவிட்டால், அது தேர்வு முடிவுகளை எதிர்மறையாக பாதிக்கும். காதல் உறவில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு காரணமாக உங்களுக்கு இடையே சற்று பிரிவு ஏற்படலாம். திருமண விஷயங்களுக்கு வரும்போது, ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். விரைவில் அந்த பிரச்சினையை பேசி தீர்க்கவில்லை என்றால் பிரிவுகூட நேரிடலாம்.
மீனம்: இந்த வாரம் சாதகமாக இருக்கும். நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில், முந்தைய சில திட்டங்கள் இந்த வாரம் மீண்டும் வேகத்தை எடுக்கக்கூடும். உங்கள் உடல்நலம் குறித்து, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வு குறித்து உங்களுக்கு சில கவலைகள் இருந்தாலும், நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணருவீர்கள். இந்த வாரம் சில தேவையற்ற செலவுகளை செய்ய நேரிடும். நீங்கள் ஒரு வீடு வாங்க வேண்டும் என கருத்தில் கொண்டால், அதை செயலாற்றுவதற்குமுன் உங்கள் நிதி நிலைமையை கவனமாக மதிப்பீடு செய்வது அவசியம். காதல் உறவில் மோதல்கள் ஏற்படலாம். இல்வாழ்க்கையில் தம்பதிகளுக்கு இடையேயும் சிறிது மனக் கசப்பு ஏற்படலாம்.