ஹராரே:ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டும் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் முறையே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை.14) மாலை 4.30 மணிக்கு ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் இன்னிங்சை யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் தொடங்கினர். கடந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய இருவரும் இந்த ஆட்டத்தில் சோபிக்க தவறினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களில் கேப்டன் சிக்கந்தர் ராஸாவின் பந்த்வீச்சில் போல்டாகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் சர்மா நீண்ட நேரம் நீடிக்கவில்லை. முசர்பனி பந்தில் 14 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில்லும் 13 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணியில் சற்று பதற்றம் தொற்றிக் கொண்டது.