ETV Bharat / state

விமரிசையாக நடைபெற்ற பெரிய கசிநாயக்கன்பட்டி எருது விடும் விழா - கண்டுகளித்த பொதுமக்கள்! - KASINAYAGAMPATTI BULL SLAUGHTERING

பொங்கல் பண்டிகையை தொடர்ந்து பெரிய கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் எருது விடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. இதில், 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப் பாய்ந்துள்ளன.

பெரிய கசிநாயக்கன்பட்டி எருது விடும் விழா
பெரிய கசிநாயக்கன்பட்டி எருது விடும் விழா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2025, 11:04 PM IST

திருப்பத்தூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு, எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. பொங்கலை முன்னிட்டு துவங்கியுள்ள எருது விடும் திருவிழா வரும் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரையில் 7 பகுதிகளில் எருது விடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

அந்த வகையில், நேற்று (ஜனவரி 17) வெள்ளிக்கிழமை மாவட்டத்தின் முதல் போட்டி வெள்ளக்குட்டை கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இரண்டாவது நாளாக இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை பெரிய கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் 42-ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. இதனை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆகியோர் விழா குழுவினருடன் உறுதி மொழி ஏற்று, கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா
திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா (ETV Bharat Tamil Nadu)

இப்போட்டியில், திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமல்லாது ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று களத்தில் சீறிப்பாய்ந்துள்ளன.

இதையும் படிங்க: சோழவரத்தில் களைகட்டிய மஞ்சுவிரட்டு விழா.. களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!

இந்த விழாவில், இருநூறுக்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திரளான பொதுமக்கள் கலந்துக்கொண்டு போட்டியைக் கண்டு ரசித்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, போட்டி நடைபெறும் பகுதி முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பெரிய கசிநாயக்கன்பட்டி எருது விடும் விழாவில் பங்கேற்ற பொதுமக்கள்
பெரிய கசிநாயக்கன்பட்டி எருது விடும் விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் (ETV Bharat Tamil Nadu)

பரிசுகள்:

எருது விடும் திருவிழாவில் குறைந்த நொடியில் இலக்கை எட்டிய காளைகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் பரிசு ரூ.55 ஆயிரத்து 555, இரண்டாவது பரிசு ரூ.50 ஆயிரத்து 555, மூன்றாவது பரிசு ரூ. 40 ஆயிரத்து 555 என மொத்தம் 36 பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

பெரிய கசிநாயக்கன்பட்டி எருது விடும் விழா (ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து நாளை முதல் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜம்மனபுதூர், நிம்மயமபட்டு, கொத்தூர் மற்றும் பெரிய மூக்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் எருது விடும் விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.