சென்னை: கன்னட சினிமாவை இந்தியா முழுக்க எடுத்து சென்ற திரைப்படம் ’கே.ஜி.எஃப்’ இரண்டு பாகங்கள். அந்த படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அதன் பிறகு இந்தியா முழுக்க தேடப்படும் இயக்குநராக மாறினார். இப்போதிருக்கும் பான் இந்தியா படங்களின் ட்ரெண்டில் முக்கியமான படமாக கே.ஜி.எஃப் இருந்து வருகிறது. மற்ற மொழி ரசிகர்கள் கன்னட சினிமாவை தேடி தேடி பார்க்க ஆரம்பித்தனர்.
அதனை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ’சலார்’ திரைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியானது. அந்த திரைப்படமும் நல்ல வசூலையும் நல்ல வரவேற்பையும் பெற்றது. ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் இணையும் இப்புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பு தொடர்பான போட்டோ ஒன்றை படக்குழுவினர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் கழித்து ஒரு படத்தை இயக்குகிறார் பிரசாந்த் நீல். இந்த படத்தை பற்றிய முதல் அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது. அதிலிருந்தே இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் எப்போது வெளிவரும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. குண்டு வெடிப்பு பிறகு நடக்கும் காட்சிகளை படமாக்குவதாக அந்த போட்டோவின் மூலம் அறியலாம்.
The SOIL finally welcomes its REIGN to leave a MARK in the HISTORY books of Indian Cinema! 🔥🔥#NTRNeel shoot has officially begun.
— Mythri Movie Makers (@MythriOfficial) February 20, 2025
A whole new wave of ACTION & EUPHORIA is ready to grip the Masses 💥💥
MAN OF MASSES @tarak9999 #PrashanthNeel @MythriOfficial @NTRArtsOfficial… pic.twitter.com/yXZZy2AHrA
இந்த படப்பிடிப்பில் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துக் கொள்ளவில்லை என தெரிகிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தான் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் ருக்மணி வசந்த், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை.
இப்படத்தின் தலைப்பிற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் முதல் அறிவிப்பை வெளியிட்ட போதும் தற்போது படப்பிடிப்பு போட்டோவிலும் மண் குறித்த வாசகங்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. மண்ணில் சிந்தும் இரத்தம் வன்முறை என இந்த படமும் பிரசாந்த் நீலின் தனித்துவ பாணியில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படத்தினை முடித்துவிட்டு தான் ‘சலார் 2’ படத்தை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல் என தெரியவருகிறது.
𝑻𝒉𝒆 𝒐𝒏𝒍𝒚 𝒔𝒐𝒊𝒍 𝒕𝒉𝒂𝒕 𝒊𝒔 𝒘𝒐𝒓𝒕𝒉 𝒓𝒆𝒎𝒆𝒎𝒃𝒆𝒓𝒊𝒏𝒈 𝒊𝒔 𝒕𝒉𝒆 𝒐𝒏𝒆 𝒔𝒐𝒂𝒌𝒆𝒅 𝒊𝒏 𝒃𝒍𝒐𝒐𝒅!!
— Mythri Movie Makers (@MythriOfficial) May 20, 2022
𝐇𝐢𝐬 𝐬𝐨𝐢𝐥.. 𝐇𝐢𝐬 𝐫𝐞𝐢𝐠𝐧..
𝐁𝐮𝐭 𝐝𝐞𝐟𝐢𝐧𝐢𝐭𝐞𝐥𝐲 𝐧𝐨𝐭 𝐡𝐢𝐬 𝐛𝐥𝐨𝐨𝐝..#NTR31 is going to be hugeeeee 🔥@tarak9999 @prashanth_neel pic.twitter.com/uF2WsiDnbP
இதையும் படிங்க: ”படத்தில் பத்து நிமிடங்களை குறைப்பதால் படம் விறுவிறுப்பாக மாறிவிடாது”... 'சப்தம்' பட நிகழ்வில் இயக்குநர் அறிவழகன் பேச்சு!
‘சலார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம், ’கே.ஜி.எஃப் 3’ என பல பிரசாந்த் நீல் இயக்குவதற்கு அடுத்தடுத்து காத்திருப்பில் படங்கள் இருக்கின்றன. ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் இணையும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அஜித்தின் "குட் பேட் அக்லி" திரைப்படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரித்து வருகிறது என குறிப்பிடத்தக்கது.
இந்த படம் பீரியட் மூவியாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஜூனியர் என்.டி.ஆர் நடித்த "தேவரா" என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.