சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் ஆண்டு விழா பிப்ரவரி 26 ஆம் தேதி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து விழா நடைபெறும் சொகுசு விடுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குக் கூட்டம் மற்றும் ஆண்டு விழா வரும் 26 ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கூட்டம் நடைபெறும் விடுதியில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் கட்சி நிர்வாகிகளுடன் இன்று (பிப்ரவரி 21) ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் குழாய் அடி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் - ஆர்பி உதயகுமார் விமர்சனம்! |
மேலும், நிகழ்ச்சி நடைபெறும் அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பாதுகாப்பு குறித்து பாதுகாவலர்கள், தலைமை நிலைய வீரர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில், தவெக தலைவர் விஜய்க்கு தனி பாதை அமைத்து, பாதுகாப்பாக விழா மேடைக்கு அழைத்து வருவது குறித்த ஏற்பாடுகள், அனைத்து பகுதிகளில் இருந்து வரும் உறுப்பினர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இடவசதிகள் மற்றும் உணவுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் உடன் இருந்துள்ளனர்.
மேலும், தமிழக பாஜக மகளிர் அணி பொறுப்பாளர் நடிகை ரஞ்சினி தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொள்ளப்போவதாக வெளிவந்த செய்திகளை தொடர்ந்து, இன்று பொதுச் செயலாளர் ஆனந்த் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.