ETV Bharat / international

மொழிகளின் பன்முகத்தன்மையைப் போற்றும் சர்வதேச தாய்மொழி தினம்! உலகம் முழுவதும் இன்று கொண்டாட்டம்! - INTERNATIONAL MOTHER LANGUAGE DAY

கலாச்சாரத்தை பாதுகாக்கும் விதமாகவும், உள்நாட்டு மொழிகளை புத்துயிர் பெற வைக்கவும், இன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச தாய்மொழி தினம்
சர்வதேச தாய்மொழி தினம் (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2025, 11:42 AM IST

ஹைதராபாத்: சர்வதேச தாய்மொழி தினம் இன்று (பிப்.21) கொண்டாடப்படுகிறது. மொழியின் பன்முகத்தன்மையை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தும் விதமாக சர்வதேச தாய் மொழி தினம் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பல மொழிகள் அழிந்து வரும் நிலையில், மொழிகளை மீட்டெடுக்கும் விதத்திலும், பன்மொழி கல்வியை ஊக்குவிக்கும், மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல் ஆகிய முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.

சர்வதேச தாய்மொழி தினம் என யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு அறிவித்ததன் 25-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு 'Silver Jubilee Celebration of International Mother Language Day,' அழிந்து வரும் மொழிகளின் பாதுகாப்பு மற்றும் கலாச்சார மேம்பாடு ஆகியவற்றின் சிறப்பம்சமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச தாய்மொழி தினத்திற்கான யோசனை வங்காளதேசத்தில் உருவானது, பிப்ரவரி 21, 1952 அன்று வங்காள மொழியை அங்கீகரிப்பதற்கான போராட்டத்தில் இருந்து உருவானது. இந்த வரலாற்று நிகழ்வு, தாய்மொழிகள் தொடர்பு ஊடகமாக மட்டுமல்லாமல், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின் களஞ்சியமாகவும் இருப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

யுனெஸ்கோ பன்மொழிக் கல்வியை ஆதரிக்கிறது. ஒரு நாட்டின் தாய்மொழியை கற்பது மூலம் அறிவாற்றல், கல்வி, செயல்திறன் ஆகியவை மேம்படுகிறது. தாய்மொழியில் கற்கும் குழந்தைகள் சிறப்பான வாசிப்பு புரிதல் மற்றும் சமூக திறன் கொண்டதாக வளர்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. உலக அளவில் கற்றல் நெருக்கடியை சமாளிக்கும் விதமாக, பள்ளிக் கல்வியின் ஆரம்ப வகுப்புகளில் இருந்தே தாய்மொழி கல்வியை அமல்படுத்துமாறு அரசாங்கங்களை வலியுறுத்துகிறது.

இந்தியா மொழியில் பன்முகத்தன்மை கொண்ட நாடாக உலகளவில் விளங்குகிறது. இந்தியாவில் 1600 மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளுக்கு மேல் உள்ள நிலையில், இந்திய அரசிலமைப்பு சட்டம் 22 மொழிகளுக்கு 8-வது அட்டவணையில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த பன்முகத்தன்மை இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக இருந்தாலும், சவால்களும் நிறைந்துள்ளது. கடந்த 1971 மக்கள்தொகை கணக்கடுப்பிற்கு பிறகு, 10 ஆயிரத்திற்கு குறைவான மக்கள் பேசும் மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதன் எதிரொலியாக கடந்த 50 வருடங்களில் 220-க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துள்ளன.

மத்திய அரசு மொழிக் கலாச்சாரத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் காரணமாக 8வது அட்டவணையில் 14 முதல் 22 மொழிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மிரி, தோக்ரி, உருது, ஹிந்தி, மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் 8-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.

11 செம்மொழிகளை அங்கீகரித்த ஒரே நாடு இந்தியாவாகும். இதன்மூலம் பல மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் சிறப்பு நிறுவனங்கள் மொழிகளை மேம்படுத்த நிறுவப்பட்டுள்ளன.

உலக அளவில் மொழிகளின் சிறப்பம்சங்கள்

  • உலக அளவில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அதில் 4% மட்டுமே ஐரோப்பிய மொழிகள் ஆகும்.
  • ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் பேசும் பல பழங்குடியின மொழிகள் அழிந்து வருகின்றன.
  • பப்வா நியூகினியா தீவில் மட்டும் 840-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
  • உலக மக்கள்தொகையில் பாதி பேர், மாண்டரின், ஸ்பானிஷ், ஆங்கிலம், மற்றும் அரபி ஆகிய மொழிகளை 0.3% பேர் பேசுகின்றனர்.
  • உலக அளவில் 14.4% சதவீத மக்கள் மாண்டரின் மொழியை பேசுகின்றனர்.
  • மொழிகளின் பன்முகத்தன்மையை குறிக்கும் விதமாக லண்டனில் 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
  • உலக அளவில் 43% சதவித மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. மேலும் நூற்றுக்கும் குறைவான மொழிகள் மட்டும் கல்வி வடிவில் உலக அளவில் உள்ளது.
  • உலக அளவில் 40 சதவீதத்தில் பேச்சு வடிவில் உள்ள மொழிகளுக்கு கல்வி வடிவில் அணுகப்படவில்லை.
  • உலக மொழிகள் அதிகமாக தென்கிழக்கு ஆசியா, இந்தியா, ஆப்பிரிக்கா, மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது.
  • கிட்டதட்ட 40% சதவீத உலக மக்களுக்கு மாண்டரின், ஹிந்தி, ஸ்பானிஷ், ஆங்கிலம், பெங்காலி, போர்ச்சுகீஸ், அரபி, ரஷ்யன் ஆகியவற்றில் ஒன்று முதன்மை மொழியாக உள்ளது.
  • இந்தியா, பப்வா நியூகினியா, இந்தோனேசியா, நைஜீரியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் அதிக அளவில் அங்கீகாரம் பெற்ற மொழிகள் உள்ளன.
  • உலக அளவில் பொதுவான பேச்சு மொழியாக ஆங்கிலம் இருந்தாலும், அதன் பரவல் மொழிக் கலாச்சாரத்திற்கு பாதகமாக உள்ளது. சர்வதேச தாய் மொழி தினம் 2025 தகவல் தொடர்புக்கு முக்கிய கருவியாக மொழி உள்ளதை நினைவுப்படுத்துகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.