ETV Bharat / spiritual

பழைய காதல் உறவை சந்திக்க நேரலாம்.. எந்த ராசிகாரர்களுக்கு தெரியும்? - THIS WEEK HOROSCOPE

மேஷம் முதல் மீனம் வரையில் 12 ராசிகளுக்கான ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை முதல் ஜனவரி 25ஆம் தேதி சனிக்கிழமை வரையிலான ராசிபலன்களைக் காண்போம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2025, 7:45 AM IST

மேஷம்: இந்த வாரம் இனிய வாரமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் மாற்றங்களை எதிர்பார்ப்பவர்களாக இருப்பவராக இருந்தால் இந்த வாரம் நல்லபடியாக அமையும். இந்த வாரம் வேலை தொடர்பான அல்லது வணிக விரிவாக்கத்திற்கு சாதகமாக இருக்கும்.

காதல் உறவில் ஈகோ தலைகாட்டுவதால் பிரச்சினைகள் ஏற்படும். எதிர்பாராத உங்கள் கோபமும், உங்கள் உறவில் சற்று விரிசலை ஏற்படுத்தும். ரியல் எஸ்டேட் தொடர்பான பணிகளை நீங்கள் மேற்கொள்ள விரும்பினால் ஒரு நிபுணரை அணுகவும். மாணவர்கள் எந்த போட்டியில் கலந்து கொண்டாலும் அவர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமாக இருக்கும்.

ரிஷபம்: எங்கிருந்தாலும் நீங்கள் முழுமையாக, உற்சாகமாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் உங்களைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள, நீங்கள் ஏதாவது ஒரு பயணத்தை மேற்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையை மாற்ற விரும்பினால். இந்த வாரம் அதற்கு உகந்ததல்ல. வியாபாரம் செய்பவர்களுக்கு, இந்த காலம் கொஞ்சம் சிக்கலாக இருக்கும்.

இந்த வாரம், ஏதாவது டிசைன் வேலைக்கோ அல்லது, மரச்சாமான்கள் வாங்கவோ அல்லது படிப்புக்காகவோ உங்கள் பணத்தை உபயோகப்படுத்தலாம். உங்களது காதல் உறவை தவறாகப் புரிந்து கொண்டதின் காரணமாக நீங்களும் உங்கள் காதல் துணையும் பிரிய நேரிடலாம். இந்த வாரம், திருமண உறவுகள் மிகவும் சந்தோஷமாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.

மிதுனம்: நீங்கள் சிறிது காலமாக வேலையை மாற்ற வேண்டும் என மனதில் நினைத்து இருந்தால் அதற்கான முதல் படிகளை எடுக்க இந்த வாரம் சிறந்ததாக இருக்கும். உங்கள் தகுதிகளைப் பொறுத்து, நீங்கள் இப்போதே அந்த வாய்ப்புகளைப் பெற முடியும்.

தொழிலில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இது வளமான வாரமாக அமையும். நீங்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால், அல்லது வெளியே செல்ல விரும்பினால் குறிப்பாக உங்கள் உடல்நலத்திலும் நல்வாழ்விலும் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், உங்கள் தொண்டையில் பிரச்சினைகள் ஏற்படலாம். சளி அல்லது இருமல் பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த வாரம் நீங்கள் ஒரு புதிய கார் வாங்கவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், உற்சாகத்திற்காகப் பணத்தை செலவிட இது நேரம் அல்ல. மூன்றாம் தரப்பினரின் தலையீடு உங்கள் காதல் உறவைப் பாதிக்கும்.

கடகம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு புதிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படலாம். ஆனால், அதிகப்படியான உழைப்பு உங்களை சோர்வடையச் செய்யும். இந்த வாரம் உங்கள் வியாபாரத்தில் புதிதாக ஏதாவது முயற்சி செய்யலாம். ஒரு நல்ல பரிவர்த்தனையையும் நீங்கள் கைப்பற்றலாம். நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைத்தால், அதற்கான, நேரம் இது இல்லை. நீங்கள் ஏதாவது கடனை வாங்க விரும்பினால் எச்சரிக்கையாக இருங்கள்.

இந்த வாரம், உங்கள் காதல் உறவுகள் தொடர்ந்து அழகாக இருக்கும். அதே சமயத்தில் இல்வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும், நீண்டகால பிரச்சினை திருமண உறவுகளை மோசமாக்கக்கூடும். பொறுமையாக இருங்கள். தினசரி பழக்க வழக்கத்தில் சிற்சில மாற்றங்களுடன் கூடுதலாக நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிக்க யோகா மற்றும் தியானத்தைத் தொடர்ந்து செய்யுங்கள்.

சிம்மம்: உங்கள் அதிகாரிகளுடன் நல்ல உறவுகளைப் பேண விரும்பினால் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். தொழில்முனைவோர் இந்த வாரம் புதிய கூட்டணிகளை உருவாக்கலாம். ஆனால், கூட்டாண்மை ஆவணங்களைப் பராமரிப்பதற்கு அதிக கவனம் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த வாரம் உங்கள் தலை மற்றும் வயிறு தொடர்பான சில பிரச்சினைகளால் நீங்கள் அவதிப்படலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக வெளியில் சாப்பிடுவதையும், பானங்கள் நீர் போன்றவற்றைக் குடிப்பதையும் தவிர்க்கவும். இந்த வாரம் உங்கள் மனத்தைக் கவர்ந்த விருப்பங்களுக்காகவும், இன்பங்களுக்காகவும் அதிகமாக செலவிடலாம். இதன் விளைவாக உங்களால் சேமிக்க முடியாது. வாழ்க்கைத் துணையுடன் நல்லிணக்கத்தை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால் மன அழுத்தம் ஏற்படலாம்.

கன்னி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, இந்த வாரம் கடின உழைப்பு நிறைந்த வாரம். தொழிலதிபர்கள் இந்த வாரம் மிகவும் உற்சாகமாக இருப்பார்கள். நீங்கள் ஒரு புதிய ஒப்பந்தத்தையும், லாபத்தையும் பெறலாம். பொதுவாக, இந்த வாரம் ஷேர் மற்றும் ஸ்பெகுலேட்டிவ் சந்தை முதலீடுகளுக்கு லாபகரமானதாக இருக்கும். பள்ளி அல்லது கல்லூரிகளை மாற்ற முடிவு செய்து இருக்கும் இளைஞர்கள் இந்த வாரம் பயனடைவார்கள். இந்த வாரம் நீங்கள் மீண்டும் ஒரு பழைய காதல் உறவைச் சந்திக்க நேரலாம்.

துலாம்: வியாபாரம் செய்பவர் எனில் இந்த வாரம் நீங்கள் விரும்பும் தொடர்புகளைப் பெறலாம். வேலையை மாற்ற விரும்பினால் இது சரியான நேரம் அல்ல. உங்கள் நிதி நிலைமை மேம்படும். நீங்கள் ஒரு சொத்து வாங்குவதற்காக கடன் வாங்க விரும்பினால் இந்த வாரம் அந்த முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.

திருமண உறவுகளைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை தேவைப்படும். உங்கள் துணையிடமிருந்து எதையும் மறைக்க வேண்டாம். உங்கள் பள்ளிப் படிப்பைப் பொறுத்தவரை, உங்கள் கல்வியை புறக்கணிக்காதீர்கள். நீங்கள் நிறைய உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஏதேனும் ஒரு தொழிற்கல்வி படிப்பில் சேர விரும்புபவர்கள் இந்த வாரம் சேருங்கள்.

விருச்சிகம்: வியாபாரத்தை முன்னேற்றும் முயற்சியில் அதிக ஆர்வமும், உற்சாகமும் கொண்டிருப்பீர்கள். இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களின் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டு இருப்பதால், வேலை மாற்ற வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். நீங்கள் இந்த வாரம் ஆடை, பள்ளி மற்றும் வீட்டு அலங்காரத்திற்காக நிறைய பணம் செலவழிக்கலாம். மாணவர்களைப் பொறுத்த வரையில் உங்கள் மனம் படிப்பில் ஈடுபடாது.

இந்த வாரத்தில் படிப்பதற்கான உற்சாகம் உங்களுக்கு இருக்காது. உங்கள் கவனத்தை வேறு விஷயங்களில் செலுத்தலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வாரம் நிறைய முயற்சி தேவைப்படும். உங்கள் துணையுடன் சில விஷயங்களில் உங்களுக்குள் முரண்பாடு ஏற்படலாம். அதே சமயத்தில், இல்வாழ்க்கையில் கூட மூன்றாம் தரப்பினரின் தலையீட்டால் உங்கள் உறவில் விரிசல் ஏற்படலாம்.

தனுசு: உங்கள் உத்தியோகம் மற்றும் வியாபாரத்தைப் பற்றிப் பேசும் போது உங்களை வியாபாரம் நன்கு செழித்து வளரும் வகையில் உருவாக்குவீர்கள். இந்த வாரம், அழகு சாதனப் பொருட்கள் விற்பவர்களுக்குச் சிறப்பான லாபம் கிடைக்கலாம். அதனால் வாழ்க்கைத் தரம் உயரும். இருப்பினும், உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைகளை மாற்றுவதற்கு இது சரியான நேரம் அல்ல. இளைஞர்களுக்கு படிப்பதற்கான உந்துதல் சற்று குறைவாகத்தான் இருக்கும். மாணவர்களின் மனம் மிகவும் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இப்போது ரியல் எஸ்டேட் வாங்க ஒரு அருமையான தருணம்.

மகரம்: வியாபாரம் செய்பவர்களுக்கு கடினமான வாரமாக இருக்கும். குறிப்பாக ஒற்றைத் தலைவலி தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் இந்த வாரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், அது இந்த காலகட்டத்தில் மீண்டும் தோன்றக்கூடும். இந்த வாரம் பண ரீதியாக உங்களுக்கு நிறைய செலவு ஏற்படலாம் . நீங்கள் இப்போது உங்கள் பணத்தை வீட்டுக்கான அலங்காரப் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தலாம். காதல் உறவுகளைப் பற்றி பேசுகையில், உங்கள் மனம் கவர்ந்தவருடன் ஏதோ ஒரு விஷயத்தில் மனக்கசப்பு ஏற்படலாம்.

கும்பம்: இந்த வாரம் உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். ஆனால், நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் உங்களுக்கு இருந்த நாள்பட்ட நரம்பு தொடர்பான நோய் உங்களுக்கு ஏற்படலாம். அதனால்தான் யோகா மற்றும் தியானத்தை உங்கள் அன்றாட பழக்க வழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த வாரம் உங்கள் காதல் துணையுடன் நிறைய நேரம் செலவிடுவீர்கள். நீங்கள் அவர்களுடன் வெளியே செல்லலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் வேறு மூன்றாவது நபர் யாரையும் தலையிட அனுமதிக்காதீர்கள், ஏனெனில் இது பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

மீனம்: உங்கள் ஆரோக்கியம் முன்பைவிட சிறப்பாக இருக்கும். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்க நீங்கள் தொடர்ந்து யோகா செய்ய வேண்டும். இந்த வாரம் நீங்கள் சொத்து வாங்க உங்கள் பணத்தை செலவிடலாம். மாணவர்களின் கல்வியைப் பற்றிப் பேசுகையில், இந்த நேரத்தில் அவர்கள் மனம் படிப்பில் கவனம் செலுத்தும்.

இருப்பினும், போட்டிக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறலாம். நீங்கள் உங்கள் காதல் துணையை எண்ணி மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். மேலும் அவருடன் / அவளுடன் நிறைய ரொமாண்டிக்கான நேரத்தைச் செலவிட முயற்சிப்பீர்கள். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் உங்கள் மனைவியுடன் எங்காவது வெளியே செல்லலாம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.