மேஷம்: சந்தோஷமான செய்தி உங்களைத் தேடி வரும். அதன் மூலம் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். அந்த செய்தி தனிப்பட்ட வகையில் இருக்கலாம் அல்லது உங்கள் தொழில் தொடர்பான செய்தியாக இருக்கலாம் அல்லது நிதி ஆதாயமாக இருக்கலாம். உங்களது நற்பெயர் காக்கப்படும் நாள்.
ரிஷபம்: இன்று ஈடுபாட்டுடன் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு, சிறந்த வகையில் கலை கையாளும் திறன் உங்களிடம் உள்ளது. அதனால் நிபுணர் தன்மையுடன் செயல்பட்டு, உங்களுக்கு இட்ட பணிகளை நிறைவேற்ற அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்: உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உற்சாகமும், மகிழ்ச்சியும் நிலவும். குழந்தைகளுடன் நீங்கள் அதிக நேரம் செலவழிப்பீர்கள். வீட்டை அலங்கரிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் நீண்ட ஆலோசனைகள் காரணமாக, நீண்ட நாட்களாக மனதிலிருந்த கவலைகள் நீங்கும்.
கடகம்: நீங்கள் கடினமாக உழைத்த பணத்தைச் செலவிடுவதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தேவையில்லாத நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காகவும், உங்களுக்கு நெருக்கமானவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவும் பணத்தைச் செலவிடுதல் நல்லது. உங்கள் பணியிடத்தில் வேலை பார்க்கும் உங்கள் தன்மையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.
சிம்மம்: உங்களுக்கு அனைத்தும், தங்கத் தட்டில் வைத்துக் கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு செயல்படக்கூடாது. உங்கள் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. இன்று நீங்கள் பொறுமையாகச் செயல்படுவது நல்லது. உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகலாம்.
கன்னி: உங்களைச் சுற்றியுள்ளவர்கள், உங்களைப் பார்த்து வியந்து ஊக்கம் பெறுவார்கள். உங்களது அறிவாற்றலும், அனைவரையும் அனுசரித்துச் செயல்படும் திறனும் அனைவரையும் கவரும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. குடும்பத்தினருடன் நல்லபடியாக நேரம் செலவழிப்பீர்கள். குடும்பப் பொறுப்புகள் மற்றும் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவும்.
துலாம்: உங்களுக்கு ஆதாயமான நாளாக இன்று இருக்காது. குறிப்பாக நேர்காணலில் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு. நம்பிக்கையைக் கைவிட வேண்டாம். கடுமையாக உழைக்க வேண்டும். நமது உழைப்பிற்கு வருங்காலத்தில், ஏற்ற பலன் கிடைக்கும்.
விருச்சிகம்: அலுவலகத்தில், உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் தன்மை கொண்டவர். இலக்குகளை அடைய நீங்கள் எந்த அளவிற்கும் சென்று வேலை பார்க்கும் திறமை கொண்டவர். புதுமையான கருத்துகளை உங்கள் சக பணியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு: வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதில் இன்று அதிக நேரம் செலவிடுவீர்கள். உங்களது பொறுமையான குணத்தினால் மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கவனமாகக் கேட்பீர்கள். இன்று உங்களுக்குச் சாதகமான நாள்.
மகரம்: நீங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடுபவராக இருந்தால், உங்கள் கனவில் வரும் நபரை நேரில் காணும் வாய்ப்புண்டு. வருங்காலத்திற்கான திட்டங்களை மேற்கொண்டு, உங்கள் காதல் துணையுடன் பரஸ்பரம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். நிபந்தனையற்ற அன்பு மற்றும் காதலின் காரணமாகப் பரஸ்பரம் மகிழ்ச்சி நிலவும்.
கும்பம்: இன்று குதூகலம் நிறைந்த நாளாக இருக்கும். ஆனால், உங்கள் சக பணியாளர்கள் அவர்களது வேலை முடியாதற்குக் காரணமாக உங்களைத் தெரிவிப்பார்கள். அதனால், உங்களது பொறுப்புகளை நீங்களே முடிப்பது நல்லது. உங்கள் மனதிற்குப் பிடித்தவர், உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்: உங்களுக்கு ஆதரவு அதிகம் தேவைப்படும். அந்த ஆதரவைக் கொடுக்கும் நபர் இன்று உங்களோடு இருப்பார். இன்று விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நடைபெறும் என்பதால், மனம் தளர வேண்டாம். போட்டியில் முன்னேறிச் செல்ல உங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.