புதுடெல்லி: சிங்கப்பூரில் நடைபெற்ற "World Chess Championship" தொடரின் 14வது போட்டியில் வென்று உலக சாம்பியன் பட்டத்தை இந்திய வீரர் குகேஷ் பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையையும் அவருக்கு கிடைத்தது.
மேலும், குகேஷ் உட்பட நான்கு பேருக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதையும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில், இன்று (ஜன.17) டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த டி.குகேஷ், ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரட்டை விருது பெற்ற மனுபாக்கர், இந்திய ஹாக்கி குழுவின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா ஒலிம்பிக் வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கேல் ரத்னா விருதினை வழங்கினார்.
கேல் ரத்னா:
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் பட்டப் போட்டியில் சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி குகேஷ் உலக செஸ் சாம்பியன் ஆனார். பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் இரட்டை வெண்கலம் வென்றார் மனு பாக்கர்.
🏆#NationalSportsAwards🏆
— PIB India (@PIB_India) January 17, 2025
President Droupadi Murmu confers Major Dhyan Chand Khel Ratna Award 2024 on World Chess Champion @DGukesh at Rashtrapati Bhavan
@rashtrapatibhvn @YASMinistry #NationalSportsAwards2024 pic.twitter.com/Y2J6vdu4yI
மேலும், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றுள்ளார். அதே போல, ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை பெற்று கொடுத்துள்ளார் ஹர்மன்ப்ரீத் சிங். பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் பிரவீன் குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
🏆#NationalSportsAwards🏆
— PIB India (@PIB_India) January 17, 2025
Double medalist at the #ParisOlympics @realmanubhaker receives Major Dhyan Chand Khel Ratna Award 2024 from President Droupadi Murmu @rashtrapatibhvn @YASMinistry #NationalSportsAwards2024 pic.twitter.com/CQkXIgYlVr
சர்வதேச விளையாட்டரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியுள்ள நான்கு பேருக்கும் மத்திய அரசு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா அறிவித்திருந்தது. இன்று நான்கு பேருக்கும் குடியரசு தலைவர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அர்ஜுனா விருது:
அதேபோல, அர்ஜுனா விருது பெற்ற 32 விளையாட்டு வீரர்களில் பதினேழு பாரா-தடகள வீரர்களும் அடங்குவர். இந்தப் பட்டியலில் ஜோதி யர்ராஜி, அன்னு ராணி, நிது, சாவீட்டி, வந்திகா அகர்வால், சலிமா டெட்டே, அபிஷேக், சஞ்சய், ஜர்மன்ப்ரீத் சிங், சுக்ஜீத் சிங், ராகேஷ் குமார், ப்ரீத்தி பால், ஜீவன்ஜி தீப்தி, அஜீத் சிங், சச்சின் சர்ஜராவ் கிலாரி, தரம்பீர்மா, தரம்பீர் எச் ஹோகடோ செமா, சிம்ரன், நவ்தீப், நிதேஷ் குமார், துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ், கபில் பர்மர், மோனா அகர்வால், ரூபினா பிரான்சிஸ், ஸ்வப்னில் சுரேஷ் குசலே, சரப்ஜோத் சிங், அபய் சிங், சஜன் பிரகாஷ் மற்றும் அமன் ஆகிய 32 பேருக்கு அர்ஜுனா விருது இன்று வழங்கப்பட்டது.