ETV Bharat / state

"சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளதாக பொய் சொல்லக்கூடாது": முதலமைச்சருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்! - BJP STATE PRESIDENT ANNAMALAI

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளதாக பொய் சொல்லிக் கொண்டிருக்காமல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2025, 8:33 PM IST

சேலம்: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியே சுற்றறிக்கை விட்டுள்ள நிலையில், இதற்கும் மேலும் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளதாக பொய் சொல்லிக் கொண்டிருக்காமல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

3-ஆவது மொழி அவசியம்: சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை," மூன்றாவது மொழி கற்பது குறித்த விவகாரம் தமிழகத்தில் முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 56 லட்சம் மாணவர்களும், அரசுப் பள்ளிகளில் 52 லட்சம் மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இப்போது 2010 பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாடமொழி, தொடர்பு மொழி தாண்டி விருப்பமொழியாக 3-வது மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

ஆனால் இந்தி மொழி கட்டாயம் என திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் திரித்து கூறுகின்றனர். திமுக தலைவர்கள் மட்டுமின்றி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நடத்தும் பள்ளிகளிலும் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. இதுபோன்ற தலைவர்களின் இரட்டை வேடத்தை தொடர்ந்து நாங்கள் அம்பலப்படுத்துவோம்.

பொறுப்பின்றி பேச வேண்டாம்: மும்மொழிக் கொள்கை தொடர்பான கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உணவு, சீருடை, காலணி ஆகியவை இலவமாக தருவதாக கூறியுள்ளார். அவருடைய சொந்தப் பணத்தில் இருந்து இது வழங்கப்படவில்லை. மக்கள் வரிப்பணத்தில் இருந்துதான் இது தரப்படுகிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். துணை முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இதுபோன்று பொறுப்பின்றி பேசக்கூடாது.

அண்ணா சாலைக்கு வர சொல்லி துணை முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். 26-ம் தேதி வரை எனக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அதற்குப் பிறகு அண்ணா சாலையில் எந்த இடம், எந்த நேரம், என்றைக்கு வர வேண்டும் என குறிப்பிட்டால், நான் மட்டும் தனியாக அங்கு வருவதற்கு தயாராக இருக்கிறேன்.

மாயத் தோற்றத்தை உருவாக்கும் திமுக: மார்ச் 1-ம் தேதி முதல் மும்மொழிக் கொள்கையின் அவசியம் குறித்து 90 நாட்களுக்கு கையெழுத்து இயக்கம் நடத்த இருக்கிறோம். மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதால், அதிகாரிகளின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் போலீசார் காவல் நிலையங்களுக்கு பணிக்கு திரும்புமாறு கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதை காவல்துறை உயர் அதிகாரியே ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு பின்னரும், முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாக பொய் கூறிக் கொண்டிருக்காமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து அவர் பொய் கூறக்கூடாது.

கல்வித்துறைக்காக தமிழ்நாடு அரசு நடப்பாண்டிற்கென 44 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் கல்வித்துறைக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவுக்கு பிறகு சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதி 2 ஆயிரம் கோடி வராததால், கல்விப்பணிகள் பாதிக்கப்பட்டு விட்டதாக ஒரு பொய்யான மாயத் தோற்றத்தை திமுக அரசு உருவாக்குகிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்க ஒப்புக்கொண்டு விட்டு இப்போது வரை அதை திமுக அரசு செயல்படுத்தவில்லை.

பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தமிழகத்தின் அமைந்ததும், குற்ற நிகழ்வுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும். பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரிப்பற்கு, ஆபாசங்கள் செல்போனில் மிக எளிதில் கிடைப்பதுதான் காரணமாக இருக்கிறது. காவல்துறையினரால் மட்டுமே பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாது. வெறுமனே, கணிதமும் அறிவியலும் மட்டும் சொல்லித் தராமல், மதம் சார்ந்த ஆன்மீக தகவல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதேபோல, பெற்றோரும், குழந்தைகளிடம் நேரம் ஒதுக்கி அவர்களை கண்காணிக்க வேண்டும்,"என்று அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.