ETV Bharat / state

பிற மாநிலங்களுக்கு விளையாட செல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு பிரச்சனை வந்தால் என்ன செய்வது? - TAMILNADU PLAYERS ATTACK

வெளி மாநிலங்களில் விளையாட செல்லும் தமிழ்நாட்டு வீரர்களுக்கு எந்த நேரத்தில் பிரச்சனை என்றாலும் அரசை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு வீரர்கள், மேகநாத ரெட்டி (கோப்புப்படம்)
தமிழ்நாட்டு வீரர்கள், மேகநாத ரெட்டி (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2025, 7:45 PM IST

By சாலமன்

சென்னை: வடமாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் அமைப்புகள் மூலமாக விளையாட செல்லும் தமிழ்நாடு வீரர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் அந்த போட்டி தொடர்களில் இருந்து தமிழ்நாடு அணி பாதியிலேயே வெளியேறும் சூழல் ஏற்படுகிறது.

மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் இது போன்ற போட்டி தொடர்களை பாதியில் முடித்துக் கொண்டு வருவதால் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடுவதில் மனரீதியான சிக்கல்களும், மாணவர்களின் பெற்றோர்களுக்கு போட்டிகள் குறித்து பயமும் ஏற்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க போட்டித் தொடர்களை முடித்து தமிழ்நாடு திரும்புவதற்கான சூழல் ஏற்படாமல், குறித்த நேரத்தில் வர முடியாமல் தவிக்கும் சிக்கல்களும் ஏற்படுகிறது. இது போன்ற சூழல்களில் தமிழ்நாடு அரசும், விளையாட்டு துறையும் உடனடியாக தலையிட்டு போட்டி நடைபெறும் மாநில விளையாட்டு துறை மற்றும் அரசிடம் பேசி சுமுகமாக தமிழ்நாடு வீரர்களை அழைத்து வருகின்றனர்.

தவித்த மாற்றுத்திறனாளி வீரர்கள்

அதில் குறிப்பிடும்படியாக, நேற்று (பிப்.20) உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல கிரிக்கெட் போட்டியை முடித்து விட்டு தமிழ்நாடு திரும்ப ரயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் எதிர்பாராத விதமாக அதிக அளவு கூட்டம் ஏறியதால் அதில் பயணிக்க முடியாமல் சூழல் ஏற்பட்டது. இதனால் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு வர முடியாமல் தவிப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இதனைப் பார்த்த தமிழ்நாடு அரசும், விளையாட்டுத் துறையும் உடனடியாக வீரர்களை தொடர்பு கொண்டு அவர்கள் விமான மூலம் தமிழ்நாடு வந்து சேருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தமிழ்நாடு வந்து சேர்ந்தனர்.

பஞ்சாப் சம்பவம்

அதேபோல், இந்தாண்டு ஜனவரியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்களுக்கான கபடி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து 4 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் சென்றனர். அதில் தமிழ்நாட்டின் அன்னை தெரசா பல்கலைக்கழகத்துக்கும், பீகார் மாநிலம் தர்பாங்கா பல்கலைக்கழகத்துக்கும் இடையே நடைபெற்ற காலிறுதி போட்டியில் புள்ளி மதிப்பெண் வழங்குவதில் பிரச்சை ஏற்பட்டு தாக்குதல்கள் நடைப்பெற்றன. இதன் காரணமாக தமிழ்நாடு பயிற்சியாளர் மீது புகார் அளிக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

ராஜஸ்தான் சம்பவம்

அதே போல, ராஜஸ்தானில் கடந்த ஆண்டு நவம்பரில் பல்கலைக்கழங்களுக்கு இடையேயான கபடி போட்டி தனியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. போட்டியின் போது தமிழ்நாட்டு வீரர்களுக்கு சரியான பாயிண்ட்களும், போனஸ்களும் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் தமிழ்நாட்டு வீரர்கள் கேள்வி எழுப்பிய போது, இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இதில் தமிழ்நாடு வீர்களை ராஜஸ்தான் வீரர்கள் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை வைத்து தாக்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் ஹரியானாவில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் நடுவர்கள் பாரபட்சமாக ஹரியானா வீரர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து பாய்ண்ட் கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. போட்டியில் விளையாடிக்கொண்டு இருக்கும் போதே தமிழ்நாடு வீரர்களை ஹரியானா வீரர்களும், அப்பகுதி மக்களும் தாக்கினர்.

இது போன்ற சூழல்களில், தமிழ்நாடு அரசின் செயல் பணிகள் என்ன என்பதனை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் தெரிவித்ததாவது:

மேகநாத ரெட்டி விளக்கம்

வெளி மாநிலங்களில் தமிழ்நாடு வீரர்கள் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகளில் சில பிரச்சனைகள் வருவது என்பது இரண்டு, மூன்று நிகழ்வுகளில் தான் நடந்துள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியின் போது அவர்களிடம் உரிய ரயில் டிக்கெட் இருந்தும் அவர்களால் பயணிக்க முடியவில்லை. ஏனென்றால் அதிக அளவு கூட்ட நெரிசல் காரணமாக பயணிக்க முடியாமல் போனது. தகவல் கிடைத்த உடனே 30 நிமிடங்களில் அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளையும் அவர்கள் தமிழ்நாடு திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுத்தது.

இது ஒரு வகை பிரச்சனை என்றால், சமீபத்தில் பஞ்சாபில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில் புள்ளி மதிப்பை பெறுவதில் பிரச்சனை ஏற்பட்டது. இது இரண்டு வீரர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சனையாக இருந்தது. அதேபோல பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் போட்டியில் எல்லாம் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. பள்ளி, கல்லூரி அளவிலான போட்டிகளிலும், அமைப்பு சார்ந்து நடைப்பெறும் போட்டிகளில் பங்கேற்க செல்லும் போது அவர்கள் தமிழ்நாடு அரசிடமும், விளையாட்டுத்துறையிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

'வட மாநிலங்களில் மட்டுமே நடப்பதில்லை'

இது போன்ற சூழ்நிலைகளிலும் போட்டிகள் நடைபெறும் நிலையில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு சரி செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டு இருக்கிறது. பிரச்சனையை சரி செய்வது நம்முடைய பொறுப்பு என்பதால் அதை எப்பொழுதும் சரியாக செய்து வருகிறோம். வட இந்திய மாநிலங்களில் மட்டுமே இது போன்று நடப்பதில்லை, தென்னிந்திய மாநிலங்களில் நடைபெறும் பல போட்டிகளிலும் புள்ளி மதிப்பு சரியாக வழங்கப்படவில்லை என்று பல்வேறு புகார்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் நடைபெறும் போட்டிகளிலும் இதே போன்று சில பிரச்சனைகள் எழுந்தன. அப்படி இருக்கும் போதும் அதை சரி செய்ய வேண்டிய கடமையும் நம்மிடம் இருக்கிறது. அனைத்து போட்டிகளில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. சரியான அமைப்பு நடத்தும் போட்டிகளில், சரியான நடுவர்கள் சரியான விதி விதிமுறைகளுடன் நடைபெறும் போட்டிகளில் இது போன்ற எந்த பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை.

நேற்று வாரணாசியில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் தவிப்பதாக தகவல் கிடைத்து 30 நிமிடங்களுக்குள் அவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் பதிவு செய்து உடனடியாக தமிழ்நாடு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். இது போன்ற சூழ்நிலையில் வேறு எந்த மாநிலமும் இப்படி செய்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். தமிழ்நாடு அரசு அந்த சூழ்நிலையில் இருந்து வீரர்களை மீட்டு எடுத்துக்கொண்டு வந்தது.

வெளி மாநிலங்களில் போட்டிக்காக செல்லும் வீரர்கள் எப்பொழுதும் தனியாக செல்வதில்லை. அவர்கள் தங்கள் குழுக்களுடன் செல்கின்றனர். அதில் மேலாளர், பயிற்சியாளர் என அந்த குழுவில் இடம் பெற்று இருப்பார்கள். அப்படி இருந்தும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் எந்த நேரத்திலும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்'' என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.