மும்பை: பாகிஸ்தான், ஐக்கிய அமீரகம் நாடுகளில் நடைபெற உள்ள 2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியை தலைமை தேர்வாளர் அஜித் அகர்க்கார் மும்பையில் இன்று அறிவித்தார்.
சாம்பியன் கோப்பை 2025 போட்டிகள் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இணைந்து இந்த போட்டிகளை நடத்துகின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று கூறியதை அடுத்து இந்தியா பங்கேற்கும் போட்டிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.
ஒன்றாவது அரையிறுதி, இறுதி போட்டி ஆகியவற்றுக்கு இந்தியா தகுதி பெற்றால் அந்த போட்டிகள் துபாயில் நடைபெறும். இல்லையெனில் அவை பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறும்.இந்த போட்டிகளில் இந்தியா ஏ குழுவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளும் ஏ குழுவில் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா களம் இறங்குகிறது. பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராகவும் இந்தியா களம் இறங்குகிறது. இன்னொரு குழுவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
India address the big question surrounding Jasprit Bumrah as they reveal their squad for #ChampionsTrophy 2025 👀
— ICC (@ICC) January 18, 2025
சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் இதுவரை எட்டு முறை நடைபெற்றுள்ளது. இரண்டு முறை இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அகர்கர், 15 பேர் கொண்ட அணியை அறிவித்தார். இதில் அண்மையில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை 2024-25 போட்டியில் பங்கேற்தால் நீடித்த முதுகுப் பிடிப்புகளால் பாதிக்கப்பட்டிருந்த பும்ரா இடம் பெற்றுள்ளார். இந்திய அணியை ஐந்து நபர் கொண்ட தேர்வு குழு தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன் கோப்பை 2025 போட்டிக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா.
🚨 Announced 🚨
— ICC (@ICC) December 24, 2024
The official fixtures for the upcoming ICC Champions Trophy 2025 are out!
Read on ⬇https://t.co/V8AVhRxxYu
இங்கிலாந்து உடன் மோதும் இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷுப்மான் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஹஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், கே.எல். ராகுல், குல்தீப் யாத். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் பும்ரா இடம் பெற மாட்டார். அவருக்குப் பதிலாக ஹஷித் ராணா இடம் பெறுகிறார்.