ETV Bharat / sports

ஒரு கிலோ பன்னீரை விட குறைவு.. பாக்.,கில் சாம்பியன்ஸ் கோப்பை டிக்கெட் விலை எவ்வளோ தெரியுமா? - CHAMPIONS TROPHY 2025

பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளின் டிக்கெட் விலையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

2025 ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிக்கெட் விலை
2025 ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிக்கெட் விலை (credit - AFP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2025, 4:59 PM IST

ஐதராபாத்: பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் கோப்பை பிப்.19 ஆம் தேதி துவங்குகிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனாக இருக்கும் பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அந்த வகையில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த போட்டிக்காக உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கு மத்தியில், சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விலையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சமாக ஒரு டிக்கெட்டின் விலை பாகிஸ்தான் மதிப்பில் 1000 முதல் தொடங்குகிறது. அதுவே இந்திய மதிப்பில் வெறும் ரூ. 310 மட்டுமே. 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை காண பாகிஸ்தான் நிர்ணயித்துள்ள டிக்கெட்டின் விலை எந்த அளவுக்கு மலிவு என்றால், இந்தியாவில் ஒரு கிலோ பன்னீரின் விலையை விட குறைவு என சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தியாவில் பன்னீர் ஒரு கிலோ சராசரியாக 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடக்கும் குழு-நிலை போட்டிகளுக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை 1000 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போட்டியை காண ரசிகர்களை இழுக்க நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், ராவல்பிண்டியில் பாகிஸ்தான் - வங்க தேசம் இடையிலான முக்கிய போட்டிகளுக்கு, டிக்கெட் விலை 2000 PKR (620 INR) இல் தொடங்குகிறது. அரையிறுதி டிக்கெட்டுகள் 2,500 PKR இல் இருந்து (776 INR) தொடங்குகிறது.

இதையும் படிங்க: 'விளையாட விரும்புகிறேன், ஆனால் டிரஸ்ஸிங் ரூமில் இல்லை' - ஓய்வு குறித்து மனம் திறக்கும் அஸ்வின்!

குழு-நிலை போட்டிகளுக்கான பிரீமியம் மற்றும் விவிஐபி டிக்கெட்டுகள் PKR 12,000 (3726 INR) மற்றும் அரையிறுதிக்கு PKR 25,000-க்கு (7764) கிடைக்கும். பிரீமியர் ஸ்டாண்டிற்கான டிக்கெட் விலைகள் இடம் சார்ந்து PKR 3,500 முதல் PKR 7,000 (1086–2170) வரை இருக்கும்.

2025 ஆண்கள் சாம்பியன்ஸ் போட்டிகளுக்கு இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதை பிசிசிஐ விரும்பவில்லை. இதனால், இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தியா அரையிறுதிக்குத் தகுதிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அரையிறுதி 1 மற்றும் இறுதி என இரண்டு போட்டிகளுமே துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் கோப்பை வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. இறுதிப் போட்டி மார்ச் 9 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி பிப்.23 ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.