தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்! ஏலத்துக்கு முன் எழுதிக் கொடுத்த நிர்வாகம்! - DELHI CAPITALS CAPTAIN SHREYAS IYER

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமிக்க அணி நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Shreyas Iyer (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 2, 2024, 3:35 PM IST

ஐதராபாத்: 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விடுவிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்கள் அணிக்கு கோப்பை வென்று தந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கியது ஏன்? என்ற அதிர்ச்சி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதன் மூலம், ஸ்ரேயாஸ் ஐயர் ஏலத்தில் பங்கேற்க இருப்பதும் உறுதியானது.

இதனிடையே டெல்லி கேபிட்டல்ஸ் அணியை தற்போது நிர்வாகித்து வரும் ஜிஎம்ஆர் நிறுவனம் ஸ்ரேயாஸ் ஐயரை மீண்டும் அணிக்கு திரும்புமாறு அழைத்ததாகவும் அதற்காகவே ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறியதாகவும் தகவல் பரவியது. மேலும், ஸ்ரேயாஸ் ஐயரை டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் ஏலத்தில் வாங்க முழு மூச்சுடன் இறங்கும் என்றும் கூறப்பட்டது.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் பதவி வழங்க டெல்லி அணி திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்காக அவரிடம் அணி நிர்வாகம் சார்பில் உத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் பரவி வருகிறது. டெல்லி அணியின் கைவசம் தற்போது 73 கோடி ரூபாய் இருப்பு உள்ள நிலையில், அதில் இருந்து பெருவாரியான தொகையை செலவழித்து கூட ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் கழற்றிவிடப்பட்டுள்ளார். ரீடென்ஷன் வீரர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. என்ன காரணத்திற்காக அவர் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார் என்பது குறித்து டெல்லி அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. ரிஷப் பன்ட் இருந்த இடத்தில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயரை வைக்க ஜிஎம்ஆர் நிறுவனம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக, கொல்கத்தா அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறியது சர்ச்சையை கிளப்பியது. கோப்பை வென்று தந்த கேப்டனை அடுத்த சீசனிலேயே கழற்றி விட்டது குறித்து அணி நிர்வாகம் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் விலகல் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் விளக்கம் அளித்து இருந்தார்.

அதில் இரு தரப்பினரும் கலந்து பேசி பரஸ்பரம் பிரியும் முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஏலச் சந்தையில் தனக்கான மதிப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே ஸ்ரேயாஸ் ஐயர் அணி நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து வெளியேறியதாகவும், அதேநேரம் அணியில் அவருக்கு முதன்மையான இடம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க:திட்டம் போட்டு விலகிய ஸ்ரேயாஸ்! மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட்டாகுமா? இல்ல சொதப்புமா?

ABOUT THE AUTHOR

...view details