கான்பூர்:வங்கதேசம் - இந்தியா அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது. தொடர் மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. முன்னதாக முதல் நாள் பெய்த தொடர் கனமழை காரணமாக கான்பூர் கிரீன் பார்க் மைதானம் ஈரமாக காணப்பட்டது.
இதனால் ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய வங்கதேச அணி தற்போது வரை 35 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் குவித்துள்ளது. போதிய வெளிச்சமின்மை மற்றும் தொடர் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் கூறுவது என்ன?:
அடுத்த நான்கு நாட்களுக்கு கான்பூரில் மழை வெளுத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. முதல் நாளான இன்று (செப்.27) இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்க 93 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளையும் (செப்.28) 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.