சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யின் ’தளபதி 69’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது. விஜய்யின் கடைசி படமான இதற்கு ’ஜனநாயகன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது அந்த படத்தின் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் இந்த படத்துடன் திரைத்துறையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். அரசியல் கட்சி துவங்கி முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார். அதனால் 'தளபதி 69’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தை கேவின் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#JanaNayaganSecondLook pic.twitter.com/zcIj9sEcPU
— Vijay (@actorvijay) January 26, 2025
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ’தளபதி 69’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு குடியரசு தினத்தன்று வெளியாவதாக அதன் தயாரிப்பு நிறுவனமான கேவின் புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை ’ஜனநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்லது.
தற்போது இரண்டாவது லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் விஜய், சிரித்தவாறே சாட்டையை சுழற்றியபடி போஸ் கொடுத்துள்ளார். அதில், ''நான் ஆணையிட்டால்'' என்று எம்ஜிஆர் பாடலின் முதல் வரி இடம்பெற்றுள்ளது. எம்ஜிஆர் நடித்து வெற்றி பெற்ற எங்கள் வீட்டு பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்ற நான் ஆணையிட்டால் என்ற பாடல் வரியும் குறிப்பிட்டு போஸ்டர் வெளியிட்டு இருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன்பான கடைசி படம் என்பதால் கண்டிப்பாக அரசியல் கருத்துகள் அடங்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனநாயகன் என்ற தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன.
இதையும் படிங்க: மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்... அநாகரிகமாக பேசியதற்கு விளக்கம் கொடுத்த மிஷ்கின்
இந்நிலையில் ’தளபதி 69’ படமானது தெலுங்கில் வெளிவந்த நடிகர் பாலைய்யாவின் ’பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் ரிமேக் என்ற யுகமும் இணையத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் படத்தில் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அந்த படத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாமல் அமைந்துள்ளது.
மேலும் இயக்குநர் ஹெச்.வினோத்தால் நடிகர் கமல்ஹாசனுக்கு சொல்லப்பட்ட கதைதான் தற்போது விஜய்யை வைத்து திரைப்படமாக உருவாகியுள்ளது என இதற்கு முன்பு பேசப்பட்டு வந்தது. ஆனால் அதுவாக இருக்குமா எனவும் தெரியவில்லை. ஆனால் முதலில் வெளியிடப்பட்ட அறிவிப்பு போஸ்டரில் ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் குறித்த யுகங்களும் எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.