உங்கள் உணவில் 'இது' இருக்கிறதா? ஆரோக்கிய வாழ்வுக்கு ICMR திட்டம் இதோ! - ICMR DIET PLAN - ICMR DIET PLAN
ICMR DIET GUIDELINE IN TAMIL: உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்னரும் டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறது ICMR. அதே போல, இந்தியர்களுக்கான ஒரு உணவு முறையையும் ஐசிஎம்ஆர் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளனர். அதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..
ஹைதராபாத்:நாம் ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியாகவும், சுறுசுறுப்பாக இருக்க நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் உற்பத்திக்கு, மூலக்காரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவு தான் என்பதை அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்க, தினசரி நாம் உண்ணும் உணவு சமச்சீரானதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
ஐசிஎம்ஆரின் துணை நிறுவனமான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் (NIN) இது தொடர்பான வழிகாட்டுதல்களை'இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள்' (Dietary Guidelines for Indians) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, இந்தியர்கள் என்ன உணவு வழிகாட்டுதல்களைப் பின்பற்றலாம்? சரிவிகித உணவு என்றால் என்ன? தனிநபர் எவ்வளவு கலோரிகள் எடுத்துக்கொள்ளலாம்? என்பதையும் விவரித்துள்ளது.
புரதம், காய்கறி, பழங்கள் என நமது அன்றாட உணவில் 8 வகையான உணவுகள் இருக்க வேண்டும் என்கிறது ஐசிஎம்ஆர். அதிலும், தினசரி 100 கிராம் பழங்களை எடுத்துக்கொள்வது கட்டாயம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
வயது மற்றும் உடல் தேவைக்கு ஏற்ப கலோரிகள் எடுத்துக்கொள்வது அவசியம். நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி,முட்டை,தயிர் போன்றவை உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
இதில், நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் அடங்கியுள்ளது. இருப்பினும், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் சாப்பிடவது சாத்தியமற்ற ஒன்று. ஆகையால், மூன்று வேளை நாம் உண்ணும் உணவில் மேற்கூரியவை இருப்பதை உறுதி செய்யுங்கள்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.