ETV Bharat / state

'பயம் வந்துவிட்டது'.. முதல்வர் நிகழ்ச்சியில் மாணவிகளின் கருப்பு துப்பட்டா பறிமுதல்.. அண்ணாமலை ஆவேசம்! - STUDENTS BLACK DUPATTA ISSUE

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளிப் பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாணவிகளிடம் கருப்பு துப்பட்டாவை அகற்ற சொன்ன விவகாரத்துக்கு அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவிகள், பறிமுதல் செய்யப்பட்ட கருப்பு துப்பட்டா
மாணவிகள், பறிமுதல் செய்யப்பட்ட கருப்பு துப்பட்டா (credit - @annamalai_k X account)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2025, 6:38 PM IST

சென்னை: சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் தமிழக அரசின் தொல்லியியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்துக் கொள்வதற்கு பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். பொதுவாக அரசு நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள் கருப்பு நிறத்தில் துணி அணிந்திருந்தால் அதனை காவல்துறையினர் அகற்றியப் பின்னரே அனுமதிப்பது வழக்கமானது.

இந்நிலையில், சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இன்று நடந்த சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு தொடக்க விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது இந்த நிகழ்ச்சிக்கு கருப்பு நிற துப்பட்டாவை அணிந்து வந்த மாணவிகளிடம் அந்த துப்பட்டாவை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே வாங்கி வைத்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்த பின்னரே அவர்களுக்கு அந்த துப்பட்டாக்கள் ஒப்படைக்கப்பட்டது. கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளிடம் துப்பட்டா கைப்பற்றப்பட்டு அரங்கிற்குள் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: பழைய பென்ஷன் திட்டம்; அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான வாக்குறுதிகள் என்னாச்சு..? சிபிஎம் அதிரடி தீர்மானம்!

வழக்கமாக நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளிடம் அவர்களது துப்பட்டா வாங்கி வைத்துக் கொள்ளப்படும். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே மாணவிகளிடமிருந்து துப்பட்டா வாங்கி வைக்கப்பட்டது எதிர் கட்சியினரை சூடாக்கியுள்ளது.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, , "கருப்பு துப்பட்டா அணிந்திருந்த மாணவிகளை அரங்கிற்குள் அனுமதிப்பதற்கு முன்பு அவற்றை கழட்டிவிட்டு உள்ளே செல்லுமாறு கூறியுள்ளனர். பயம் வந்து விட்டது. என்ன நடக்கிறது என்பதை அறியாதவர்களாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும் மாறிவிட்டனர். இது என்ன ஒரு எதேச்சதிகாரம்?'' என எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.