ETV Bharat / health

HMPV வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்..பொது சுகாதார இயக்குநரகம் கொடுத்த நல்ல செய்தி! - HMPV OUTBREAK IN CHINA

சீனாவில் பரவி வரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் பற்றி அச்சமைடைய தேவையில்லை எனவும், இது மற்ற சுவாச நோய் தொற்றுகளை போன்றது தான் என சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : Jan 4, 2025, 4:13 PM IST

கரோனாவை மிஞ்சும் கொடிய வைரஸ் சீனாவில் பரவி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய வைரஸ் பரவல் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என பொது சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உருவான கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலையில், கரோனா வைரஸ் போன்ற அறிகுறிகளுடன் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி-HMPV) எனும் புதிய வைரஸ் சீனா வடகிழக்கு மாகாணங்களில் பரவ தொடங்கியது. இந்த தொற்றால் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 'சீனாவில் பூதாகரமாக பரவத் தொடங்கிய புதிய வைரஸ் தொற்று, சளியை உண்டாக்கும் மற்ற சுவாச தொற்றுகளை போன்றது' என்றும், 'இதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை' என பொது சுகாதார சேவைகள் இயக்குநர் மருத்துவர் அதுல் கோயல் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், 'இந்த தொற்று குளிர்காலத்தில் ஏற்படும் மற்ற தொற்றுகளை போன்றது, இதற்கு மற்ற சுவாச நோய்தொற்றுகளுக்கு எதிரான வழக்கமான முன்னெச்சரிக்கை போதுமானது' எனவும் குறிப்பிட்டுள்ளார் மருத்துவர் அதுல் கோயல். இந்த நிலையில், மனித மெட்டாப்நியூமோவைரஸின் பாதிப்புகள், அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

HmPV வைரஸ் பாதிப்பு?:

  • இந்த நோய் தொற்றின் அறிகுறிகள் கரோனா, காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்களின் அறிகுறிகளைப் போலவே இருக்கும்.
  • இருமல், காய்ச்சல், சளி, தொண்டை வலி ஏற்படும்
  • தீவிர வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா வருவதற்கான வாய்ப்பு உள்ளது
  • நோய்தொற்று ஏற்பட்ட 3 முதல் 6 நாட்களுக்குள் நோயின் அறிகுறிகள் தோன்றும்
  • குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு நோய் தொற்று எளிதில் வர வாய்ப்புகள் அதிகம்
  • சுவாசப்பாதையில் பாதிப்பு ஏற்பட்டு நுரையீரல் தொற்று ஏற்படும்.

தொற்று பரவுவது எப்படி?:

  • இருமல் மற்றும் தும்மல் முக்கிய காரணியாக இருக்கிறது
  • வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகுவது மற்றும் கைகுலுக்குவது
  • பாதிக்கப்பட்ட பகுதிகளை தொட்ட கைகளால் வாய், மூக்கு மற்றும் கண்களை தொடுவதால் வைரஸ் பரவுகிறது.

தற்காப்பது எப்படி?:

  • குறைந்தது 20 வினாடிகளுக்கு சோப் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவவும்
  • கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடாதீர்கள்
  • நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருங்கள்
  • சளி இருப்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும்
  • இருமல் அல்லது தும்மும்போது, வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவும்
  • வைரஸ் தொற்று உள்ளவர்கள் வெளியில் செல்ல வேண்டாம்

சிகிச்சை: HMPV க்கு தற்போது குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சை எதுவும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவரை தடுப்பூசி எதுவும் உருவாக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. நோயின் அறிகுறிகளுக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர்.

இதையும் படிங்க: சீனாவில் பரவும் புதுவகை வைரஸ் தொற்று....எப்படி தற்காத்துக் கொள்வது?

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.