சென்னை:இயக்குநர் ஷங்கர்இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய திரைப்படம் 'இந்தியன் 2'. இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது.
கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் தயாராகியுள்ள இப்படம் வருகிற ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது.