ETV Bharat / entertainment

சூர்யாவுக்கு வில்லனாகும் ஆர்.ஜே.பாலாஜி? - சூர்யா 45 அப்டேட்! - RJ BALAJI NEGATIVE ROLE SURYA

'SURYA 45' UPDATE: சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் சூர்யா 45 படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் நடிகர் யாரென்பது குறித்து வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சூர்யா
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சூர்யா (Credits - @DreamWarriorpic X account, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 5, 2025, 6:13 PM IST

சென்னை: கங்குவா படத்தைத் தொடர்ந்து ’ரெட்ரோ’, ’சூர்யா 45’ என அடுத்தடுத்து இரண்டு படங்களில் வேகமாக நடித்து வருகிறார் சூர்யா. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெட்ரோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. சமீபத்தில் அந்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்ட படக்குழுவினர், படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

அதை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார் சூர்யா. இந்த படத்திற்கு தற்காலிகமாக ’சூர்யா 45’ என தலைப்பு வைத்து அழைத்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மிக நீண்ட ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சூர்யா-த்ரிஷா இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலில் பேசிய நடிகர் சித்ரா லெட்சுமணன் மற்றும் திரைப்பட ஆளுமை தனஞ்செயன் ஆகியோர் இந்த திரைப்படத்தை பற்றிய புதிய தகவலை பகிர்ந்து கொண்டனர். ’சூர்யா 45’ திரைப்படத்தில் மிக முக்கியமான நெகட்டிவ் ரோல் ஒன்று இருப்பதாகவும் அதில் அப்படத்தினை இயக்கி வரும் ஆர்.ஜே.பாலாஜியே நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட சூர்யாவிற்கு எதிராக அந்த கதாபாத்திரம் இருக்கும் எனவும் அவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: ”பிளாக் டிக்கெட்டில் ஷங்கர் படம் பார்த்தேன்” - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சு

சூர்யா கதாபாத்திரமும் ஆர்.ஜே.பாலாஜியின் கதாபாத்திரமும் எதிரெதிர் சித்தாந்தங்கள் உடையவர்களாக இருப்பார்கள் என்றும், அதனால் ஏற்படும் மோதல்கள் படத்தின் மையமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. வழக்கமான கமர்ஷியல் திரைப்படமாக இல்லாமல் வித்தியாசமான திரைப்படமாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

’சூர்யா 45’ திரைப்பட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பற்றிய புது தகவலால் அந்த கதாபாத்திரம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எகிறியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.