வாஷிங்டன்: ஜோ பைடன் ஆட்சி காலத்தில் அதானி குழுமத்துக்கு எதிராக குற்றச்சாட்டு கூறப்பட்டது குறித்து அந்நாட்டை சேர்ந்த 6 எம்பிக்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு வழக்கறிஞருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்காவின் நீதித்துறையின் சார்பில் கேள்விக்குரிய முடிவு எடுக்கப்பட்டதற்கு எதிராக இந்த கடிதத்தை அவர்கள் எழுதி உள்ளனர். இதன் காரணமாக அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடான இந்தியா உடனான உறவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கேள்விக்குரிய தீர்மானம்: லேன்ஸ் கூடென், பாட் ஃபால்ஆன், மைக் ஹரிடோபோல்ஸ், பிரான்டன் கில், வில்லியம் ஆர் டிமோன்ஸ், பைரன் பாபின் ஆகியோர் கடந்த 10ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அரசு வழக்கறிஞர் பமீலா பேடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில்,"பைடன் நிர்வாகத்தின் கீழ் நீதித்துறையானது கேள்விக்குரிய தீர்மானங்களை மேற்கொண்டது குறித்து கவனத்தை ஈர்க்கவிழைகின்றோம். பைடன் நிர்வாகத்தின் சில முட்டாள் தனமான முடிவுகளால் நட்பு நாடுகளான அமெரிக்கா-இந்தியா இடையேயான தொடர்ச்சியான பேச்சுவார்த்தை மற்றும் வரலாற்றுரீதியிலான நட்புணர்வில் அபாயம் எழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள அதானி குழுமத்தின் பொறுப்பாளர்களுக்கு எதிரான வழக்கு எனும் இது போன்ற ஒரு முடிவு கேள்விக்கு உரிய செயல்பாடுடன் தொடர்புடையதாகும்.
இதையும் படிங்க: இஸ்ரோவுடன் இணைந்து உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 'செமிகண்டக்டர் சிப்'பை உருவாக்கி சாதனை படைத்த சென்னை ஐஐடி!
இந்த வழக்கை உரிய இந்திய அதிகாரிகளுக்கு மாற்றுவதற்கு பதில், பைடன் நிர்வாகத்தின் நீதித்துறை, இந்த வழக்கை முன்னெடுப்பது என தீர்மானித்தது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நலன் அடங்கியுள்ள நிலையில் அதற்கு தீங்கு ஏற்படும் என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
தவறான வழிகாட்டலுடன் கூடிய நகர்வு: சில வெளி அம்சங்கள் தலையீடு இல்லாமல், இந்தியா போன்ற கூட்டாண்மை நாட்டின் உறவில் சிக்கலை ஏற்படுத்தும் முறையில் வழக்கு தொடக்கப்பட்டதை ஏற்றுக் கொள்வதற்கான காரணம் ஏதும் இல்லை. இந்த தவறான வழிகாட்டலுடன் கூடிய நகர்வானது ் டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபரான இந்த தருணத்தில் இந்தியா போன்ற உத்திப்பூர்வமான புவியல் ரீதியிலான கூட்டாண்மை நாட்டுடனான நமது உறவில் தீங்கு விளைவிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு பங்களிக்கும் முதலீட்டார்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான, பில்லியன் கணக்கான பங்களிப்பை வழங்குவோர் மற்றும் ஆயிரகணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களுக்கு எதிரான தடையை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை உள்ளது. இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவின் நலனை கருத்தில் கொள்ளாமல் இந்த குற்றச்சாட்டை தொடுப்பது என்ற தீர்மானம் அமெரிக்காவின் நலனுக்கு நன்மையை ஏற்படுத்துவதை விடவும் மேலும் தீங்கு விளைவிக்கும்.
சீனாவுக்கு பயனிக்கும்: இருதரப்பு உறவில் வீழ்ச்சி என்பது நீண்டகால கூட்டாண்மைக்கு தீங்கு மட்டுமின்றி, பெல்ட் அண்ட் ரோடு என்ற முயற்சியின் மூலம் மொத்த சர்வதேச பொருளாதாரத்தை கட்டுபடுத்தி அமெரிக்காவின் பொருளாரத்தை அழிக்க வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ள சீனா போன்ற எதிர்ப்பு நாடுகளுக்கு பலன் அளிப்பதாக இருக்கும். பைடனின் நீதித்துறை நடத்தையை நீங்கள் புலனாய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிக்காக இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்வதை எதிர்பார்க்கின்றோம்,"என்று கூறப்பட்டுள்ளது.