ETV Bharat / state

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 2025: ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது! - TAMIL NADU ASSEMBLY 2025

2025ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் துவங்கவுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்ச்சை ஏற்படுத்திய ஆளுநரின் உரை இம்முறை எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு, ஆளுநரை சந்தித்த அப்பாவு
தமிழ்நாடு அரசு, ஆளுநரை சந்தித்த அப்பாவு (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2025, 7:10 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2025ம் ஆண்டிற்கான முதல் கூட்டம் ஜனவரி 6 காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது. ஆளுநர் உரைக்கான கூட்டத்திற்கு பின்னர் அலுவல் ஆய்வுக்குழுவின் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்து சபாநாயகர் அறிவிக்க உள்ளார்.

சட்டப் பேரவை கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சியில் தேர்வுச் செய்யப்பட்ட தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், தனி அலுவலர்களை நியமனம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்புவதற்கு எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், ஆளுநர் உரை மீதான கூட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம் பெறுவது வழக்கமாகும். ஆளுநரின் உரையில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், கொள்கைகள், அரசின் சாதனைகள், அந்த ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் ஆகியவை இடம் பெறும். ஆளுநரின் உரை சட்டப்பேரவையால் தயார் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தமிழ்நாடு ஆளுநர் சட்டப் பேரவையில் படித்து, பேரவையின் முதல் கூட்டத்தை தொடங்கி வைப்பார்.

2023ஆம் ஆண்டு சர்ச்சை:

திமுக ஆட்சி அமைந்தப் பின்னர் தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநருக்கு இடையே உள்ள மோதல் காரணமாக அரசினால் கொடுக்கப்படும் பேச்சை திருத்தம் செய்து ஆளுநர் ஆர். என். ரவி படிப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: இதையும் படிங்க: 'பயம் வந்துவிட்டது'.. முதல்வர் நிகழ்ச்சியில் மாணவிகளின் கருப்பு துப்பட்டா பறிமுதல்.. அண்ணாமலை

2023ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் அந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தொடங்கியது. அப்போது உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, தேசிய கீதம் முடிவதற்கு முன்பே வெளியேறி விட்டார். ஆளுநர் உரையில் இடம் பெற்ற அம்பேத்கரின் பெயர், திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை உச்சரிக்கவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

2024ஆம் ஆண்டு சர்ச்சை:

2024ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்ற ஆண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது தமிழில் உரையை வாசிக்க தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் வாசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து தனது உரையை முடித்துகொண்டார். தமிழ்நாடு அரசின் உரையை முற்றிலும் புறக்கணித்தார்.

இந்த நிலையில், 2025ஆம் ஆண்டிற்கான சட்டப் பேரவையின் முதல் கூட்டம் இன்று (ஜன.6) நடைபெற உள்ள நிலையில், சட்டப் பேரவையில் உரை நிகழ்த்த வருமாறு முறைப்படி அழைப்பு விடுப்பதற்காக இன்று காலை சபாநாயகர் அப்பாவு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, சட்டப் பேரவையில் உரை நிகழ்த்த வருமாறு அழைப்பு விடுத்தார். அவரும் வர சம்மதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பேரவை செயலகம் செய்து வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.