ETV Bharat / entertainment

திருப்பதி கோயிலுக்கு நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்! - ACTRESS JANHVI KAPOOR

பிரபல நடிகை ஜான்வி கபூர் இன்று திருப்பதி கோயிலுக்கு நடந்தே சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி கோயிலில் ஜான்வி கபூர் சுவாமி தரிசனம்
திருப்பதி கோயிலில் ஜான்வி கபூர் சுவாமி தரிசனம் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 4, 2025, 5:08 PM IST

ஹைதராபாத்: நடிகை ஜான்வி கபூர் திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். பிரபல நடிகை ஸ்ரீதேவி, போனி கபூர் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு ’தடக்’ என்ற திரைப்படம் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமான ஜான்வி கபூர், பின்னர் கோஸ்ட் ஸ்டோரிஸ் (Ghost stories), குஞ்சன் சக்சேனா (gunjan saxena), மில்லி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குஞ்சன் சக்சேனா திரைப்படத்தில் விமானப்படை வீரராக ஜான்வி கபூரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் குட் லக் ஜெர்ரி என்ற படத்தில் நடித்தார். இது தமிழில் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்காகும். கடைசியாக ஜான்வி கபூர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ’தேவரா’ திரைப்படத்தில் நடித்தார். இது ஜான்வி கபூர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும்.

தேவரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் இன்று (ஜன.04) காலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இன்று காலை மேல் திருப்பதி வரை நடந்தே சென்று விஐபி ஸ்ரீவாரி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: தலைவர் ஃபேன்ஸ் கொண்டாட தயாரா?... 'தளபதி'யை தொடர்ந்து ரீரிலீஸ் ஆகும் 'படையப்பா'! - PADAYAPPA RERELEASE

நடிகை ஜான்வி கபூரை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் வரவேற்று தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர். நடிகை ஜான்வி கபூர் திருப்பதி கோயிலுக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக ஜான்வி கபூர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படத்தை பாராட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.