புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவான டானா புயல் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பயங்கர தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு கரையைக் கடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை புயல் கரையைக் கடக்கும் முன்பு 12.05 மணியளவில், கேந்திரபாராவில் உள்ள பிதர்கனிகா மற்றும் தாம்ரா இடையே மணிக்கு 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.
அதிக காற்று, கனமழை மற்றும் மோசமான கடல் அலைகள் காரணமாக, ஒடிசாவின் கடலோரப் பகுதிகள் பயங்கர சேதத்தைச் சந்தித்தன. டானா புயலின் கோர தாண்டவத்தால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. குறிப்பாக, ஒடிசாவின் கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பாலசோர் ஆகிய இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 100 கிமீ வேகத்தில் வீசியது.
இதனால், ஆக்ரோஷமான கடல் அலைகள் 2 மீட்டர் உயரத்துக்கு ஆர்ப்பரித்து பிதர்கனிகா தேசிய பூங்காவிற்கு அருகே உள்ள பகுதிகளை மூழ்கடித்தது. பின்னர், வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் மேற்கு வங்கம் - ஒடிசா இடையே புயல் கரையைக் கடந்தது. இதனால், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்கட்டமைப்பு மற்றும் பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஒடிசா அடிக்கடி புயலுக்கு இலக்காவது ஏன்? காரணங்களை விளக்கும் வல்லுநர்கள்!