புதுடெல்லி: குண்டடிபட்டு காயமடைந்தவர்களுக்கு கட்டு கட்டுவது போல் உள்ளது என்று மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அடுத்த நிதியாண்டுக்கான (2025 -26) பொது பட்ஜெட்டை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டை வரவேற்றும், விமர்சித்தும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
A band-aid for bullet wounds!
— Rahul Gandhi (@RahulGandhi) February 1, 2025
Amid global uncertainty, solving our economic crisis demanded a paradigm shift.
But this government is bankrupt of ideas.
காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, மத்திய பொது பட்ஜெட்டை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், " உலக அளவில் பொருளாதார நிலையற்றத்தன்மை நிலவிவரும் நிலையில் தேசம் எதிர்கொண்டுள்ள பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் முன்னுதாரணமான பட்ஜெட் நாட்டுக்கு தேவையாக உள்ளது. ஆனால், மத்திய அரசு முன்யோசனை இல்லாமல் ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இது குண்டடிபட்டு காயமடைந்தவர்களுக்கு கட்டு கட்டுவது போல் உள்ளது." என்று மத்திய பட்ஜெட்டை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.