ETV Bharat / state

எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும் - நெட்கான் டெக்னாலஜி தலைவர் கூறிய முக்கிய தகவல்! - ELECTRIC VEHICLES

2025-26 நிதி நிலை அறிக்கையில் மின்சார வாகனங்கள் மற்றும் மொபைல் பேட்டரிகளுக்கு சலுகைகள் வெளியிடப்பட்ட நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் குறையும் என நெட்கான் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

நெட்கான் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மகாலிங்கம்
நெட்கான் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மகாலிங்கம் (ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2025, 6:31 PM IST

சென்னை: பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கிய நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (Union Budget) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) சனிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இதில், மின்சார வாகனங்கள் மற்றும் மொபைல் பேட்டரிகளுக்கு சலுகைகள் மற்றும் லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்க வரி முற்றிலுமாக ரத்து உள்ளிட்ட முக்கிய அறிவிப்புக்களையும் வெளியிட்டார்.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனத்தில் பயன்படுத்தப்படும் லித்தியம், அயோடின் பேட்டரி மூலப்பொருட்கள் இறக்குமதி செய்வதற்கான வரியை குறைத்துள்ளதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் குறையும் என நெட்கான் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

நெட்கான் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மகாலிங்கம் பேட்டி (ETV Bharat TamilNadu)

இது குறித்து நெட்கான் டெக்னாலஜி (Netcon Technologies) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மகாலிங்கம் கூறுகையில், “மத்திய அரசின் பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஏஐ (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வியை எவ்வாறு மேம்படுத்தப்படும் என ஆராய்ச்சி செய்ய முடியும்.

மேலும், இது டீப் டெக் அல்லது டீப் டெக்னாலஜி (Deep Technology) தொழில் தொடங்க உதவியாக இருக்கும். எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, எலெக்ட்ரிக்கல் வாகனம் (Electrical vehicle) மற்றும் கிளீன் டெக்னாலஜிக்கு (clean technology) முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக் மூலப் பொருள்களுக்கு வரி விலக்கு கொடுத்துள்ளனர். இது தொழில் வளர்ச்சிக்கு பயன்படும்.

இதையும் படிங்க: பட்ஜெட் 2025: விலை குறையும் மின்சார வாகனங்கள் - பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்!

எலெக்ட்ரிக் வாகனம் விலை குறைய வாய்ப்பு:

லித்தியம் பேட்டரி எலெக்ட்ரிக்கல் வாகனத்தின் ஒரு முக்கியமான உதிரிபாகமாகும். எலெக்ட்ரிகல் வாகனத்திற்கு பேட்டரி தான் அதிக செலவாகும். பட்ஜெட்டில் லித்தியம் பேட்டரி மூலப்பொருள் இறக்குமதிக்கான வரி விலக்கு கொடுத்துள்ளதால், எலெக்ட்ரிக் வாகனம் உற்பத்தி செலவு குறைந்து, வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு:

தமிழ்நாடு எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் (electronics technology) முன்னணி மாநிலமாக உள்ளது. இந்த பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு நன்றாக இருக்கும். எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல் வாகனத் தொழிலில் நிறைய வேலை வாய்ப்புள்ளது. திறன் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பசுமை ஆற்றலை (Green Energy) நோக்கி உலகம் சென்று கொண்டுள்ள நிலையில், அரசாங்கம் கிளீன் டெக் தொடர்பான வாகன உற்பத்திக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளித்துள்ளனர். எனவே, இது போன்ற அறிவிப்புகள் பூஜ்யம் கார்பன் டை ஆக்சைடு (Net zero) நோக்கி செல்வதற்கு வாய்ப்பாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.