ETV Bharat / international

கனடா, மெக்சிகோ, சீனா மீது இறுகும் அமெரிக்காவின் பிடி.. 25% வரை வரி என கனடா பதிலடி! - TRUMP AMERICA TARIFFS

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்ட வரி விதிப்பு தொடர்பான ஆணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரை வரி விதிக்கப்படும் என்று கனடா எச்சரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (Associated Press)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2025, 4:29 PM IST

பாம் பீச்: அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கடுமையான வரி விதிக்கப்படும் என நேற்று (பிப்.1) அதிரடியாக அறிவித்தது மட்டுமின்றி, அதற்கான ஆணை ஒன்றில் கையெழுத்திட்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், ' "அமெரிக்கர்களைப் பாதுகாக்க" வரி அவசியம். முதலில் சட்டவிரோத ஃபெண்டானில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டும். அத்துடன் அமெரிக்காவிற்குள் நடைபெறும் சட்டவிரோதமாக குடியேறுவதை தவிர்க்க வேண்டும் கனடா. மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளை வலியுறுத்துகிறேன்." என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

டிரம்பின் இந்த நடவடிக்கைகள் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகவும், மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கான பொருட்களின் விலையை குறைப்பதாகவும் என டிரம்ப் அளித்த இரண்டு வாக்குறுதிகளையும் ஒன்றாக எப்படி சமாளிப்பார் என்ற கேள்லி அமெரிக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டிரம்பின் தேர்தல் வாக்குறுதிப்படி மளிகைப் பொருட்கள், பெட்ரோல், வீட்டுவசதி, ஆட்டோக்கள் மற்றும் பிற பொருட்களின் விலைகளைக் குறைக்கப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால், தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% வரிகளையும், மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரியும், எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி சார்ந்த பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என்று பொருளாதார அவசரநிலை குறித்த தமது அறிவிப்பில் டிரம்ப் குறிப்பட்டிருந்தார்.

இந்த நடவடிக்கை அமெரிக்காவின் இரண்டு பெரிய வர்த்தக நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடா இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வர்த்தக பனிப்போரை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மெக்சிகோவின் அதிபர் மற்றும் கனடாவின் பிரதமர் அமெரிக்க மீதான இறக்குமதி வரியை $155 பில்லியன் வரை 25% உயர்த்தி உத்தரவிட்டிருந்தனர். சீனா எந்த நடவடிக்கையும் இதுவரை கையில் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "பழிவாங்கும் எண்ணத்தோடு வரி விகிதங்கள் அதிகரிக்கும் என்றால், அமெரிக்கா அதே போக்கை கடைப்பிடிக்கும். அப்படிச் செய்தால் உலக வர்த்தகம் சீர்குலைந்துவிடும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, "வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானம் மற்றும் பழங்கள் என 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகம் மீது வரி வசூலிப்பு நடைமுறைக்கு வரும்.

இதன் விளைவு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எங்களின் முக்கிய நுகர்வோரான அமெரிக்க மக்களிடம் நேரடியாக கூறுகிறேன். மளிகைப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலைகளை அதிகரிக்கும். மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்தது கனடா. ஆனால் வெள்ளை மாளிகை இன்று எடுத்த நடவடிக்கையால் நாம் பிரித்துவிட்டோம். இனி பலருக்கு "இருண்ட காலம்" தான்"என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.

இவரை போன்றே, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கூறும்போது, "மெக்சிகோவின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், அமெரிக்காவின் இந்த வர விதிப்பு நடவடிக்கைக்கு விரைவில் தக்க பதிலடி தரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷீன்பாம் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டார். அதில் "மெக்சிகன் அரசாங்கம் குற்றங்கள் புரியும் அமைப்புகளுடன் கூட்டணி வைத்துள்ளது என்ற வெள்ளை மாளிகையின் அவதூறை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். அதேபோல் எங்கள் நாட்டின் விஷயங்களில் அமெரிக்கா தலையிடுவதன் நோக்கத்தையும் நாங்கள் நிராகரிக்கிறோம்," எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், கனடா மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஆளுநர்் டேவிட் எபி, “அமெரிக்காவின் "சிவப்பு" மாகாணங்களில் இருந்து மதுபானங்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும். மேலும் அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க மதுபான பிராண்டுகளை அரசாங்க கடைகளிலிருந்து அகற்றப் போகிறோம்" என்று எபி அதிரடியாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.