ETV Bharat / sitara

நாஞ்சில் விஜயனை வீடு புகுந்து தாக்கிய சூர்யா தேவி! - youtube celebrity nanjil vijayan

நடிகை வனிதாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி நாஞ்சில் விஜயனை, சூர்யா தேவி தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா தேவி
சூர்யா தேவி
author img

By

Published : Oct 12, 2020, 12:00 PM IST

பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று வருபவர், வளசரவாக்கம் வீரப்பா நகரைச் சேர்ந்த நாஞ்சில் விஜயன் (வயது 31). இவர் தனியாக யூ-ட்யூப் சேனல் ஒன்றைத் தொடங்கி பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று (அக்.11) இவர் தனது வீட்டில் துணை நடிகையான ஷீபாவுடன் நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென்று சூர்யா தேவி அவரது கூட்டாளிகளுடன் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது அவர், வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகக் கூறி நாஞ்சில் விஜயனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் நாஞ்சில் விஜயன், ஷீபா இருவரையும் சூர்யா தேவி தாக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது குறித்து சூர்யா தேவி மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சூர்யா தேவி, நடிகை வனிதா திருமணம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த ராஜபக்சே மகன்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.