ETV Bharat / sports

"இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்" - கிரிக்கெட் வீரர் நடராஜன் உறுதி! - CRICKETER NATARAJAN

ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் நடராஜன்
கிரிக்கெட் வீரர் நடராஜன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

Updated : 3 hours ago

திருச்சி: பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் நான் இதுவரையில் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் விளையாடியது இல்லை என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இன்று (ஜனவரி 10) வெள்ளிக்கிழமை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில், எதிர்கால சந்ததியினருக்கு விளையாட்டுத் துறையில் என்ன அறிவுரை வழங்குவீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “விளையாட்டு மட்டுமல்லாமல் எந்த துறையாக இருந்தாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையினை முழு ஈடுபாட்டுடன் விருப்பத்துடன் செய்ய வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசியதாவது, விளையாட்டுத் துறையில் கிராமப்புறங்களில் மிக்கியத்துவம் கிடைக்கவில்லை என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு தற்போது அதிகளவில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், அவர்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில்லை. கடினமாக உழைத்தால் மட்டுமே நாம் தேர்ந்தெடுக்கும் துறையில் முன்னேற முடியும்” என்றார்.

கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

CSK அணியில் விளையாட வாய்ப்பு?

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் பிறந்த அனைவரும் சி.எஸ்.கே (CSK) அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கண்டிப்பாக நானும் அதை நினைக்கிறேன். அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். நான் நிறைய கேப்டன்களின் தலைமையில் விளையாடி உள்ளேன். குறிப்பாக, கேப்டன்கள் விராட் கோலி மற்றும் வில்லியம்சன் தலைமையில் விளையாடியுள்ளேன். இவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இதுவரையில் விளையாடியது இல்லை” என்றார்.

இதையும் படிங்க: "இந்தி தேசிய மொழி அல்ல"-கிரிக்கெட் பிரபலம் ரவிசந்திரன் அஸ்வின்!

தொடர்ந்து, இந்திய அணி கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வியடைந்தது குறித்த கேள்விக்கு? பதில் அளித்த அவர், “விளையாட்டில் ஏற்றத் தாழ்வுகள் கண்டிப்பாக இருக்கும். தற்போது சில வீரர்கள் ஃபார்ம் அவுட்டில் (Form out) உள்ளனர். அவர்கள் அடுத்தமுறை ரன் அடிக்கும் போது அதை பெரிதாக பேசுவார்கள். போட்டிகளில் தோல்வியடைவது நம் கையில் இல்லை. இரண்டு தொடர்களில் தோல்வியடைந்ததை வைத்து நாம் எதுவும் கூற முடியாது” என்றார்.

இந்திய அணியில் மீண்டும் இடம்?

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பீர்களாா? என்ற கேள்விக்கு, “கடந்த ஐபிஎல் தொடர் சிறப்பாக இருந்தது. இந்த வருடமும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்.

கிராமத்தில் இருந்து வந்து இந்திய அணியில் விளையாடுவதே பெரிய சாதனை. நான் அனுபவித்த இன்னல்களை வருங்கால இளைஞர்கள் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக எனது சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் அமைத்து தந்துள்ளேன். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை” என்றார்.

தொடர்ந்து, அஸ்வின் இந்தி மொழி பற்றி கருத்து கூறியது குறித்து உங்களது கருத்து என்ன? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அது குறித்த கேள்வி வேண்டாம் என மறுப்பு தெரிவித்துள்ளார்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Last Updated : 3 hours ago
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.