ETV Bharat / health

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி..'இந்த' நேரத்தில் செய்தால் பலன் ஏராளம்! - BEST TIME TO WORKOUT

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினசரி குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிறது சர்வதேச ஆய்வு. அதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)
author img

By ETV Bharat Health Team

Published : 4 hours ago

Updated : 4 hours ago

அனைவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், குறிப்பாக நீரிழிவு மற்றும் ப்ரீடயாபெட்டிக்ஸ் உள்ளவர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது அவசியம். உலகளவில் 800 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO கூறுகிறது.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் உணவுமுறை மற்றும் மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், குறிப்பிட்ட நேரங்களில் உடற்பயிற்சி செய்வது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சரி, உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த எப்போது உடற்பயிற்சி செய்ய வேண்டும்? நீங்கள் என்ன வகையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஏன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்?: உடற்பயிற்சி இன்சுலினை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. மேலும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்தால், அனைத்து நன்மைகளையும் சேர்த்துப் பெற முடியும் என்றால் நம்ப முடியுமா? 2023 ஆம் ஆண்டு NCBI வெளியிட்ட ஒரு ஆய்வில், சரியான நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று கூறியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

உடற்பயிற்சி செய்ய சரியான நேரம்?: உணவருந்திய பின் குறிப்பாக காலை மற்றும் மதிய உணவுக்கு பின் உடற்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என கூறப்படுகிறது. பொதுவாக, நாம் உணவருந்திய பின்னர், சர்க்கரை அளவு அதிகரிக்கும். அந்த வகையில், உணவுக்கு பின் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, இரத்தத்தில் கலக்கும் குளூக்கோஸஸை தசைகள் உறிஞ்சுகின்றன.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

2023ல் NCBI நடத்திய ஆய்வில், உணவுக்குப் பிறகு 15 நிமிட நடைப்பயிற்சி அல்லது லேசான உடற்பயிற்சி செய்வது, உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உணவுக்கு முன் காலையில் உடற்பயிற்சி செய்வதும் காலப்போக்கில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என குறிப்பிட்டுள்ளது.

இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க சிறந்த பயிற்சிகள்:

கடுமையான உடற்பயிற்சி செய்வது மட்டும் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்பதல்ல. ஒரு சில எளிய மற்றும் நிலையான செயல்கள் மூலம், உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.

நடைபயிற்சி: சாப்பிட்ட பிறகு 15 முதல் 30 நிமிடங்கள் நடப்பது, சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

யோகா: அதோ முக ஸ்சானாசா (Downward facing dog pose), புஜங்காசனா (Cobra Pose), பாலாசனா (Child pose) போன்ற எளிய யோகாசனங்களை செய்யும் போது இரத்த ஓட்டம் சீராக நடைபெற்று, சர்க்கரை அளவு உயர்வதை குறைக்கிறது.

ஸ்ட்ரென்த் டிரெயினிங்: வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை குறைந்த எடை கொண்ட வெயிட் தூக்குவது அல்லது ஜிம்மில் சென்று பயிற்சி மேற்கொள்வது, இரத்த சர்க்கரை அளவு உயர்வதை தடுக்கிறது.

சைக்கிள் ஓட்டுதல்: கலோரிகளை எரிக்கவும் இரத்த சர்க்கரையை நிர்வகிக்கவும் சைக்கிள் ஓட்டுதல் சிறந்து செயல்படும்.

நீச்சல்: உடல் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிச்சல் பயிற்சியை மேற்கொள்ளும் போது, இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

இதையும் படிங்க: குடல் புற்றுநோயை தடுக்கும் ஒரு கிளாஸ் பால்..சர்வதேச ஆய்வில் தகவல்!

பொறுப்புத் துறப்பு: இங்கே, உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணர் ஆலோசனை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தகவலை வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரை அணுகுமாறு பரிந்துரைக்கிறோம்.

Last Updated : 4 hours ago
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.