திருவனந்தபுரம்: பெண்கள் இதுவரை ஈடுபடாத துறைகளில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் திட்டங்களை கேரள அரசு செயல்படுத்தி வருகிறது என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள அரசின் தீயணைப்புத்துறையில் பெண்களைக் கொண்ட ஸ்கூபா டைவிங் குழு நாட்டிலேயே முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. இது குறி்த்து கருத்து முகநூலில் கருத்துத் தெரிவித்துள்ள அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்,"பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களின் முன்னேற்றத்தில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பாகும். பாலின சமநீதியை உறுதி செய்தல், அரசின் திட்டங்களின் வாயிலாக கேரளாவில் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முன்னணி இடம் வகிக்கின்றனர்.
#Kerala continues to lead in gender justice with women excelling across sectors. The launch of India’s first all-women scuba diving rescue team under the Fire & Rescue Department marks another proud step towards a more progressive and inclusive future. This historic achievement… pic.twitter.com/PBLQg9JyQo
— Pinarayi Vijayan (@pinarayivijayan) February 11, 2025
பாரம்பரியமாக இதுவரை பெண்கள் ஈடுபடாத துறைகளில் பெண்களின் பங்களிப்பை, அவர்களின் இருப்பை அதிகரிக்கும் பல முயற்சிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில்தான் நாட்டிலேயே முதன் முறையாக பெண்களைக் கொண்ட ஸ்கூபா டைவிங் குழு தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வனத்துறை நிலத்தை அபகரித்த ஆந்திர முன்னாள் அமைச்சர் பெத்திரெட்டி...வெளியானது அதிர்ச்சி அறிக்கை!
2024ஆம் ஆண்டு தீயணைப்புத்துறையில் மீட்பு அலுவலர்களாக பணியமர்த்தப்பட்ட 100 பெண்களில் இருந்து 17 பேர் கொண்ட பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கேரள தீயணைப்பு மற்றும் மீட்பு பணி சேவைகள் துறையில் நீர் நிலை பாதுகாப்பு நிபுணத்துவ பயிற்சி மையத்தில் 17 பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. நீர் நிலைகளில் மூழ்குதல் போன்ற விபத்துகளில் மேலும் திறன் மிக்க வகையில் மீட்பு பணியை மேற்கொள்ளும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வரலாற்று ரீதியிலான சாதனை முயற்சியாகும்.
கேரளா தொடர்ந்து பாலின சமநீதியில் முன்னிலை வகிக்கிறது. துறைகள் தோறும் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் முன்னேற்றம் அடைந்த, எல்லோரையும் உள்ளடக்கிய எதிர்காலத்துக்கான முன்னெடுப்பாக இந்தியாவிலேயே முதன் முறையாக பெண்களைக் கொண்ட ஸ்கூபா டைவிங் மீட்பு குழு கேரளாவின் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் மேற்கொண்டிருப்பது இன்னும் ஒரு பெருமிதம் அளிக்கக் கூடிய முன்னெடுப்பாகும். இந்த வரலாற்று ரீதியிலான சாதனை என்பது மேலும் பல முயற்சிகளுக்கு வழிவகுப்பதாக இருக்கும்,"என்று கூறியுள்ளார்.