ETV Bharat / opinion

டிரம்ப் 2.0: அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகளும், இந்தியாவுக்கான சாதக, பாதகங்களும்! - PM MODI US VISIT

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்பின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால், இந்தியாவுக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து விவரிக்கிறது இக்கட்டுரை.

வெள்ளை மாளிகையில்  பிரதமர் மோடி -அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு
வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி -அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு (PTI)
author img

By Vivek Mishra

Published : Feb 14, 2025, 10:13 PM IST

ஹைதராபாத்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபின், பாரத பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் உடனான அவரது சந்திப்பில், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டது.

அவற்றில் முதலாவதும், முக்கியமானதுமாக, இந்தியா -அமெரிக்கா இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தோ- பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், குடியேற்றம் உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும்.

அடுத்ததாக, உள்நாட்டு பாதுகாப்புக்கு இம்முறை டிரம்ப் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். இது அந்நாட்டுடனான இந்தியா போன்ற நாடுகளின் உறவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிரான டிரம்ப் அரசின் அதிரடி நடவடிக்கைகள் இந்த பிரச்சனையின் தீவிரத்தை உலகிற்கு உணர்த்துவதாக உள்ளது.

இது இந்தியாவுடன் நேரடியாக தொடர்புடைய பிரச்சனை இல்லையென்றாலும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் அமெரிக்காவின் தீவிர நடவடிக்கையை பார்க்கும்போது, இது நட்பு நாடுகளுடனான உறவில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

மூன்றாவதாக, வலுவான இந்தியா-அமெரிக்க உறவுகளின் உலகளாவிய தாக்கங்கள், மாறிவரும் புவிசார் அரசியல், இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஆசியாவில் அதிகார சமநிலை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது. மாறிவரும் உலக அரசியல் சூழலில், இந்தியாவுக்கு அமெரிக்கா தேவைப்படுவது போலவே அமெரிக்காவிற்கும் இந்தியா தேவைப்படுகிறது. இத்தகைய சூழலில் மாறிவரும் புவிசார் அரசியல் உள்ள காரணிகள் இந்தியா -அமெரிக்க உறவின் முக்கியத்துவத்தை இன்று வலுப்படுத்தியுள்ளன.

தங்கள் முன்னுள்ள பிரச்சனைகளின் ஆழத்தை அறிந்து, அவற்றை களைவதற்கான நடவடிக்கைகளில் தற்போது இறங்குவதன் வாயிலாகவே இந்திய- அமெரிக்க உறவு நீட்சி பெற்று தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - அமெரிக்கா இருதரப்பு உறவுகள் குறித்த கொள்கையில் அமெரிக்க அதிபர்கள் ஒவ்வொருவரும் தங்களது சொந்த தடயத்தை விட்டுச் செல்கின்றனர். அதன்படி, முன்னாள் அதிபர் ஜோ பைடன் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை டிரம்ப் தொடர்கிறார்.

இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு (டிரம்ப் 2.0) மேற்கொண்டு வரும் பல அதிரடி நடவடிக்கைகள் இந்தியாவுக்கு சாதகமாகவோ அல்லது பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, அமெரிக்காவின் அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா, தமது முக்கிய போட்டியாளரான சீனா ஆகிய நாடுகள் மீது டிரம்ப் அரசு கடுமையான புதிய வரிகளை விதித்துள்ளது.

மெக்சிகோ, கனடா, அர்ஜென்டினா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு உலோகத்துக்கு 25% வரி விதிப்பை அமெரிக்க அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்தப் பட்டியலில் இந்தியா இல்லை என்பது கவனத்தில் கொள்ள முக்கிய அம்சமாகும். அமெரிக்காவின் கூட்டாளியாக இல்லாத, இந்தியாவின் தனித்துவமான நிலைப்பாடு, அதிபர் டிரம்ப் அரசின் வர்த்தக வரி விதிப்பு நடவடிக்கையில் இருந்து இந்தியாவை விலக்கி வைக்க காரணமாக இருக்கலாம்.

இதையும் படிங்க: இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் புரட்சி: முன்னெடுப்பதில் உள்ள வாய்ப்புகள், சவால்கள்

இந்தோ -பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, அமெரிக்காவுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை வடிவமைக்கும் ஓர் முக்கிய புவிசார் அரசியல் காரணியாக திகழ்கிறது.அதேசமயம் காசா மற்றும் உக்ரைன் போர் விவகாரங்களில டிரம்ப் அரசு காட்டிய அவசரம் சீனா அதனை கேள்வி கேட்க இடம் கொடுக்கும்படி உள்ளது.

அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்துக்கு சீனா கடும் சவாலாக முன்நிற்கிறது. சீனாவின் இந்த சவாலை டிரம்ப் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்பதை பொறுத்தே, இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான புவிசார் அரசியல் மற்றும் தொழில்நுட்ப போட்டி வரும் நாட்களில் வரையறுக்கப்படும். இதுவே, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உலகளாவிய நிலைப்பாட்டையும் வரையறுக்கும்.

அதிகரித்து வரும் உலகளாவிய அரசியல் முரண்களுக்கு மத்தியிலும் சீனா -ரஷ்யா இடையேயான உறவு வளர்த்து கொண்டுதான் உள்ளது. இத்தகைய சூழலில், சமீபத்திய அமெரிக்க அதிபர்களை விட, டிரம்ப் அரசு நிர்வாகம் சர்வதேச உறவுகளில் பிளவுபட்ட அணுகுமுறையை கொண்டுள்ளதாகவே தெரிகிறது. இந்த நிலையில், உள்நாட்டு பிரச்சனைகளை களைவதற்கு முக்கியத்துவம் அளித்துவரும் டொனால்ட் டிரம்ப் அரசாங்கம், சர்வதேச பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவர முன்னுரிமை அளித்து புதிதாக எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை என்று அறிவித்துள்ளதில் வியப்பேதும் இல்லை. 'வலிமையின் வாயிலாக அமைதி' என்ற டிரம்பின் கோட்பாடு, இந்தியாவின் நீண்டகால ராஜதந்திர விருப்பத்தை பிரதிபலிப்பதாகவே அமைந்துள்ளது.

அதேசமயம், உலகளாவிய மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்னெடுப்புகளை அமெரிக்கா எடுத்து வருகிறது என்பதற்கு இரண்டு முக்கிய உதாரணங்கள் உள்ளன. ஒன்று மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம். அடுத்து ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தத்துக்காக இருநாட்டு அதிபர்கள் உடனான டிரம்பின் சமீபத்திய உரையாடல்கள், உலகில் அமைதியை நிலைநிறுத்துவதற்கான அவரது நோக்கத்தை உணர்த்துவதாக உள்ளன.

உலக அமைதிக்கான அமெரிக்காவின் முன்முயற்சிகள் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் பயனளிப்பதாக அமைந்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளுடான வர்த்தகம் உள்ளிட்ட தொடர்புகளின் மூலம் இந்தியா அவற்றுடன் ஆழமான உறவை கொண்டுள்ளது. அமெரிக்காவின் போர் நிறுத்த முயற்சிகள், இந்தியா- மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (IMEC) தொடங்க அனுமதிக்கும். இதன் மூலம், எல்லைப்புறங்களில் சாலை அமைத்தல் உள்ளிட்ட சீனாவின் கட்டமைப்பு சவால்களை இந்தியா எதிர்கொள்ள இயலும்.

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை, ரஷ்யா மீதான சர்வதேச நாடுகளின பொருளாதார தடையை தளர்த்த வழிவகுக்கும். அத்துடன், இதன் காரணமாக ரஷ்யா உடனான இந்தியாவின் ராஜாங்கரீதியான உறவில் இருந்துவரும் அழுத்தம் குறையும்.

இருப்பினும், அமெரிக்காவுடனான பொருளாதார உறவை கையாள்வது இந்தியாவுக்கு ஒருவேளை சவாலாக இருக்கலாம். வரி விதிப்புகளை தவிர்ப்பது மற்றும் தம்முடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை குறைப்பது இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கலாம். ஆனால், இந்தியாவுடனான வர்த்தக, பொருளாதார உறவுகள் குறித்த டிரம்பின் கோரிக்கைகளில் சிலவற்றையேனும் இந்தியா நிறைவேற்றுவதன் மூலம், குடியேற்றம் குறித்த பிரச்னைக்கான தீர்வுகளை இந்தியா உறுதியாக முன்வைக்க முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.