ஹைதராபாத்: தனியார் கல்லூரி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தி மொழி குறி்தது கருத்துத் தெரிவித்தன் மூலம் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தி மொழி குறித்து தெரிவித்த கருத்தால் மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு மத்தியில் ரவிச்சந்திரன் அஸ்வின் உரையாற்றினார், "ஆங்கிலமோ, தமிழோ தெரியாத நிலையில் இந்தி மொழியில் கேள்வி கேட்பதை விரும்புகிறீர்களா?" என்று மாணவர்களிடம் வினவினார். ஆனால், அஸ்வின் கேட்டதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. இதனைத் தொடர்ந்து பேசிய அஸ்வின், "நான் இது பற்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன். இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல. அது ஒரு அலுவல் மொழி மட்டுமே,"என்றார். ரவிசந்திரன் அஸ்வின் இவ்வாறு கூறியதையடுத்து அவருக்கு எதிராக சமூக ஊடக தளங்களில் பலர் வலுவான கணடன கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக பாஜக ஆதரவாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் உண்டியலில் கிடைத்த பொக்கிஷம்... இன்ப அதிர்ச்சி கொடுத்த பக்தர்!
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் சமூக ஊடக தளங்களில் ஆக்டிவ் ஆக உள்ள பலர் அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக திமுகவும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள திமுக நிர்வாகி டிகேஎஸ் இளங்கவோன், "பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசி வரும் நிலையில் இந்தி எப்படி தேசிய மொழியாக இருக்கமுடியும்?,"என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
அஸ்வின் கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும் என்று அவரது கிரிக்கெட் ரசிகர்கள் பல நாட்களாக விருப்பம் கொண்டிருந்தனர். இது குறிந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், "நான் இந்திய அணியின் கேப்டன் ஆக வேண்டும் என்ற ஆசையில் அந்த பதவியை குறிவைத்து ஒரு போதும் செயல்படவில்லை. என்னால் கேப்டனாக செயல்பட முடியாது என்று யாரேனும் ஒருவர் சொன்னால் நான் அதை நிறைவேற்றியே தீருவது என்று செயல்படுவேன். ஆனால் அவர்கள் என்னால் முடியும் என்று சொன்னால், நான் ஆர்வத்தை இழந்துவிடுவேன்,"என்றார்.