நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்து வரும் ஏப்ரல் 13அன்று பீஸ்ட் வெளியாக உள்ளது. ஏற்கெனவே பீஸ்ட் படத்தின் இரண்டு பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் டீஸருக்காக விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
நெல்சனின் புதிய ட்வீட்: டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தான் பீஸ்ட் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். பீஸ்ட் படத்தின் போஸ்டர், ரிலீஸ் தேதிகள் வெளியானதையடுத்து, தற்போது நெல்சன் அவரது ட்விட்டர் பக்கத்தில் 'நாளை' எனப் பதிவிட்டுள்ளார். இதனை நாளை பீஸ்ட் குறித்த அப்டேட் ரிலீஸாக போவதாக விஜய் ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்க்கின்றனர்.
ரஜினி பட அப்டேட்டா? : ரஜினிகாந்தின் 169ஆவது படத்தையும் நெல்சனே இயக்குகிறார். இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர். மேலும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனைத்தொடர்ந்து நெல்சனின் ட்வீட், ரஜினி நடிக்கும் 169ஆவது படத்தைப் பற்றிய தகவலாகக்கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
நாளை…
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) March 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">நாளை…
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) March 29, 2022நாளை…
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) March 29, 2022
இதையும் படிங்க:பெரிய நடிகர்களை நம்பி ஏமாற வேண்டாம் - பேரரசு அட்வைஸ்!